English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Manganese
n. மங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம்.
Mange
n. மயிரடர்ந்த விலங்குகளின் தோல் நோய், தோல் மாசு,
Mangel, mangel-wurzel
n. கால்நடைத் தீவனமாகப்பயன்படும் பெரிய சர்க்கரைக் கிழங்கு வகை.
Manger
n. குதிரை இலாயத தொட்டி, மாட்டுக் கொட்டில், தொட்டி.,
Mangle
-1 n. சலவை மடிப்புப்பெறி, (வினை) சலவைப் பொறியிலிட்டு அழுத்தி மடி.
Mangle
-2 v. கை, அடித்துச் சிதை,கொத்து, உருக்கெடவெட்டு, சின்னாபின்னப்படுத்து, மூலத்தைத் தப்புத்தவறாக்கி உருத்தெரியாது பண்ணு, சொற்களைத் தவறாக ஒலித்து இனம் தெரியாததாக்கு.
Mango
n. மாங்காய், மாங்கனி.
Mango-fish
n. பொன்வண்ண மீன்வகை.
Mangonel
n. (வர) படைத்துறைக் கவண்பொறி, கல்லுமிழ் பொறி.
Mangosteen
n..(மலாய்) மங்குஸ்தான் பழம், மங்குஸ்தான் மரம்.
Mangrove
n. மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்பமண்டலச் சதுப்புநிலப் படர் தாவர வகை.
Mangy
a. மயிரடர்ந்து வங்கு பற்றிய, அழுக்கடைந்த், இழி தோற்றமான.
Manhandle
v. மனித ஆற்றலால் மட்டுமே இயக்கு, முரட்டுத் தனமாகப் பிடித்து இழு.
Manhattan
n. இன்தேறல் கலவைக் குடிவகை.
Manhole
n. புதைச்சாக்கடை வாயிற்புழை, புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.
Man-hour
n. மன்மணி அலகு, ஒரு மனிதன் ஒரு மணி நேரம் செய்யும் வேலையளவு.
Mania
n. வெறி, கோட்டி, மூளைக்கோளாறு, மனமாறாட்டக் கோளாறு, பேரார்வம், மட்டுமீறிய ஆவர், உணர்ச்சியார்வ மிகை.
Maniac
n. வெறியர், கோட்டிக்காரர்ர, பித்தேறியவர், அறிவிழந்தவர், பித்தர்ர, (பெயரடை) பைத்தியம் பிமடித்த, வெறியான, அறிவிழந்த.
Maniacal
a. பைத்தியம் பிடித்த, பைத்தியம் பிடித்தவர்போன்ற.
Manic
a. பித்துவெறி சார்ந்த, பித்து வெறிக்கு ஆட்பட்ட.