English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mercurial
-1 n. பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு, (பெயரடை) பாதரசத்துக்குரிய, பாதரசம் போன்ற, பாதரசத்தினால் விளைந்த, துடிப்புள்ள, சுறுசுறுப்பான, சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த, கூர்நுட்படைய, நிலையற்ற, திடீர்மாறுபாடுடைய.
Mercuric
a. (வேதி) ஈரிணை திறப் பாதரசமடங்கிய.
Mercurous
a. (வேதி) ஓரிணைதிறப் பாதரசமடங்கிய.
Mercury
-2 n. ரோமரின் புராண மரபில் சொல்திறம் கைத்திறமை திருடுமாற்றம் ஆகிய பண்புகளையுடையவரான வானவர் தூதுவத் தெய்வம், புதன்கோள்.
Mercy
n. அருள், கருணை, தயவு.
Mercy-seat
n. விவிலிய மரபில் திருவருள் உடன்படிக்கைப் பேழையின் தங்கக்கவசம், ஆண்டவன் அருட்பீடம்.
Mere
-1 n. ஏரி, குளம், குட்டை.
Mere
-2 a. வெறும், வேறு கலப்பற்ற, குறை எல்லையுட்பட்ட.
Meretricious
a. விலைமகளின் பாங்கான, அணிமணிவகையில் வௌதப்பகட்டான, இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய.
Merganser
n. மீனுண்ணும் நீர்மூழ்கி வாத்து வகை.
Merge
v. தற்பண்பிழந்து ஒன்றுபடு, தனிநிலைககெட்டுக் கலந்திணை, இரண்டறக் கல, அடங்கி ஒன்றாகு,பட்டம்-பதவி வகையில் இணைந்த கூறாயமைந்துவிடு, நிலப்பரப்பு வகையில் பெரும் பரப்பில் ஒன்றுபட்டிணை.
Merge document
ஆவண இணைப்பு
Merger
n. கலப்பிணைவு, ஒன்றுபடுநிலை.
Meridian
n. வான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய.
Meridional
n. தென்பகுதியில் வாழ்பவர், பிரான்சு நாட்டின் தென்பகுதியில் வாழ்பவா, (பெயரடை) ஐரோப்பாவின் தென் பகுதியில் வாழ்கிற, நடுநிரல் கோட்டைச் சார்ந்த, வானுச்சம் சார்ந்த.,
Meringue
n. முட்டையின் வெண் கருவுடன் சர்க்கரை கலந்த தின்பண்ட வகை, முட்டைவெண்கரு சர்க்கரை கலந்து சுட்ட மெல்லப்ப வகை.
Merino
n. மிக நேர்த்தியான கம்பளி மயிரினையுடைய ஆடுவகை, மென்மையான கம்பள ஆடை, பருத்தியும் கம்பளியும் சேர்த்து நெய்த மென்றுகில், மிகநேர்த்தியான கம்பளி நுல்.
Merit
n. தகுதி, மதிப்பு, நலன், சிறப்பு, நற்கூறு, உள்ளார்ந்த நலம், (வினை) தண்டனை அல்லது சிறப்புப் பெறுதற்குத் தகுதியாகு.
Meritorious
a. பரிசுத் தகையார்ந்த, புகழ்த்தகுதியுடைய, பாராட்டுத் திறனுடைய, நன்றிக்குரிய.