English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mental
-1 n. (பே-வ) மன நோய், மன நோயுடையவர், (பெயரடை) மனஞ் சார்ந்த, மனத்தால் இயக்கப்படுகிற.
Mental
-2 a. மோவாய் சார்ந்த, தாடை சார்ந்த.
Mentality
n. மனப்போக்கு, மனப்பாங்கு, மனப்பான்மை.
Mentation
n. மனநிலை, உளஇயக்கம்.
Menthol
n. பச்சைக் கற்பூரம்.
Mention
n. குறிப்பீடு, குறிப்பு, பெயரிடு, (வினை) குறிப்பிடு, பெயர் குறி, தெரிவி.
Menu
n. உணவு வகைப் பட்டியல்.
Mephistophels
n. செர்மன் நாட்டுப் புராணக் கதைகளில் வரும் தீய ஆவி, சைத்தான், கொடியவன்.
Mephitis
n. நச்சு வளி,மண்ணிலிருந்து, வௌதப்படும்நச்சு ஆவி, கேடுதரும் நச்சு வாடை.
Mercantile
a. வாணிகஞ் சார்ந்த, வாணிகம் பற்றிய, பண அவாவுள்ள, பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Mercenary
n. அயல் நாட்டிலிருந்து வந்து பணி செய்கிற கூலிப்படை வீரர், (பெயரடை) கூலிக்காக வேலை செய்கிற, பணத்தை நாடிய.
Mercer
n. அறுவவணிகன், பட்டு முதலிய உயர்ந்த துணிவகை வணிகள்.
Mercerize
v. நுல் துணி ஆகியவற்றுக்குப் பளபளப்பும் உறுதியஙம் கொடுப்பதற்காகக் கடுங்கர உப்பிட்டுப் பக்குவப்படுத்து.
Merchandise
n. வாணிகச்சரக்கு, விற்பனைப் பொருள்கள்.
Merchant
n. பெருவணிகர், அயல்நாடுகளோடு மொத்த வாணிகம் செய்பவர்.
Merchantable
a. விற்கத்தக்க, விலைப்படத்தக்க, வாணிகத்திற்கேற்ற.
Merchantman
n. வாணிகக்கப்பல்.
Merciful
a. அருளிரக்கமுடைய, இரக்கங்காட்டுகிற, தயையுள்ள, மன்னிக்குமியல்புடைய.
Merciless
a. இரக்கமற்ற, கொடிய மன்னிக்குங் குணமற்ற,