English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Microzyme
n. புளிப்பு நொதியிலுள்ள நுண்மம்.
Micturition
n. அடிக்கடி சிறநீர் கழிக்க விரும்பும் கோளாறு.
Mid
n. நடு, (பெயரடை) நடுவிலுள்ள, இடைப்பட்ட, இடைநிலையான, இடைத்தரமான, (ஒலி) ஒலிவகையில் உயர்வு தாழ்வு ஆகிய ஒரு நிலைகளுக்கும் இடைப்பட்ட, நடுநிலையில் தோன்றுகிற.
Mid-air
n. நிலத்திலிருந்து சிறிது தொலைவான உயரம். வான்வழிப் பயண நடுவிடம்.
Midday,
நண்பகல், (பெயரடை) நண்பகலுக்குரிய.
Midden
n. எருமேடு., குப்பைமேடு.
Middle
n. நடு, நடுப்பகுதி, இடையிடம், இடைப்பகுதி, அரை,இடுப்பு, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல், (பெயரடை) நடுச்சார்ந்த, இடைப்பட்ட, இடைநிலையான, சரி இடையான, இடைக்காலத்துக்குரிய, இடைப்பகுதியான, இடையேயுள்ள இடையீடான, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான, (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு, பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை, (கப்) நடுவே மடி,.
Middle-weight
n. இடைநிலை எடையாளர், குத்துச் சண்டைக்காரர்கிளடையே 165 கல்லெடைக்கும் 154 கல்லெடைக்கும் இடைப்பட்ட எடையுடையவர்.
Middling
a. இடைநிலைப்பட்ட, மட்டமான நலமுடைய, இரண்டாந்தரமான, மட்டாக உடல்நலமுடைய, (வினையடை) மட்டாக, நடுஅளவாக.
Middlings
n. நடுத்தரப்பட்ட சரக்குகள், நடுத்தரமான கோதுமை மாவு, மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண்.
Midge
n. கொசுவினப் பூச்சிவகை, குறுமனிதர், குற்றுருவ முடையவர்.
Midget
n. குறளன், வேடிக்கையாகக் காட்டப்படத்தக்க குள்ளன், நனி சிறுபொருள்.
Midinette,
பாரிஸ் நகரத்துக் கடைக்காரப் பெண், துணிக்கடை அணங்கு.
Midland
n. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய.
Midlands
n. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள்.
Midman
n. தரகர், அம்பணவர், இடையீட்டாளர், பொருள் தருபவர் பெறுபவர்களுக்கு இடைப்பட்ட வணிகர்.
Midmost
n. நேர்நடுவிடம், (பெயரடை) மையத்தில் மையமான, உள்நடுவான.
Midnight
n. நள்ளிரவு, இரவு 12 மணி, கூரிருட்டு.
Midrash
n. (எபிரேயம்) யூத மறைப்பகுதிக்குரிய பண்டை உரைவிளக்கம்.
Midrib
n. இலையின் நடுநரம்பு.