English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mithra, Mithras
பண்டைப் பாரசிகச் சமய மரபில் கடவுள், பகலவன், செங்கதிர்த்தெய்வம்.
Mithridatize
v. சிறிதுசிறிதாக நஞ்சுண்டு நச்சுக் காப்பீடு செய்துகொள்.
Mitigate
v. மட்டுப்படுத்து, தணி, அமைதிப்படுத்து, நோவாற்று, தண்டனையின் கடுமையைக் குறை.
Mitosis
n. (உயி) உயிர்மப் பிளவியக்கம, உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.
Mitral
n. நெஞ்சுப்பையின் சவ்வடைப்புக்களில் ஒன்று, (பெயரடை) மாவட்டச் சமயமுதல்வரின் தொப்பி சார்ந்த, மாவட்டச் சமய முதல்வரின் தொப்பிபோன்ற.
Mitre
-1 n. மாவட்டச் சமயமுதல்வரின் நிண்ட நடுப்பிளனவுடைய தொப்பி, (வினை) மாவட்டச் சமயமுதல்வருக்குரிய தொப்பி அணிவி, மாவட்டச் சமயமுதல்வர் பதவி அளி.
Mitre
-2 n. மரத்துண்டுகளின் செங்கோண இணைப்பு, அரைச்செங்கோணம், 45 பாகையுள்ள கோணம், (வினை) துண்டுகளின் இணைவாயின் சாய்வு 45 பாகை கோணம் படும்படியாக இணை, முனைகளுக்கு 45 பாகைக் கோணச் சாய்வுதளங்கொடு.
Mitre-block, mitre-board, mi,tre-box
n. மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு இரம்பத்துக்குத் துணைசெய்யும் அமைவு.
Mitre-wheels
n. pl. சாய் பற்சக்கரங்கள், ஊடச்சுக்கு 45 பாகைச் சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.
Mitring-machine
n. மர முனைக்கு 45 பாகைச் சாய்வு கொடுப்பதற்கான இயந்திரம்.
Mitt, n.
அடிக்கையுறை, விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை.
Mitten
n. ஓரக்கறை, அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை.
Mittimus
n. சிறு சேர்ப்பாணை, சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை, (பே-வ) பதவியினின்று நீக்கம்.
Mix
v. காலந்திணைவி, சேர்த்திணை, ஒன்றாகக் கூட்டு, கலவையாக்கு, மருந்து கல, கலப்புறு, கூடு, இணை, ஒன்றுசேர், கூடியுறவாடு, கலக்கவிடு, குழப்பமுண்டுபண்ணு, இனக்கலப்புச் செய், இனக்கலப்புறு, திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை.
Mixa
n. கீல்வாத அக எரிவுக்கு, மாற்றான புற எரிவாகப்பயன்படுத்தப்படும் மூலிகைத்துய்.
Mixed
a. கலப்பான, ஈரினமான, பல்வகையான, வெவ்வெறு இயல்புகள் இணைந்த, பல கூறுகள் கலந்துள்ள, கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத, சந்தேகப் பேர்வழிகள் கொண்ட, (பே-வ) மனங்குழம்பிய, தடுமாற்றமுற்ற, ஆண்பெண் இருபாலாருக்குமான.
Mixen
n. (பே-வ) எருமேடு,. உருக்குவியல்.
Mixer
n. கலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
Mixture, n..
கலப்பு, தனிப்பண்புமாறா இயற்கூட்டு, கலவை, கலக்கப்பட்ட பொருள், மருந்துக்கூட்டு, உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய்.
Mizpah
n. விடைபெறு வாசனம்.