English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mizzen
n. பின்புறக் கப்பற்பாய்.
Mizzen-mast
n. பின்கோடிக் கப்பற்பாய்மரம்.
Mizzle
n. மழைத்தூறல், (வினை) மழை தூறு.
Mkercurial
-2 n. புதன் கோளினைச் சார்ந்த.
Mlist
a. சற்று நனைந்த, ஈரமான, பருவகால வகையடில் மழை பெய்கிற, நோய்வகையில் சீழ் முதலியவை கசிகிற.
Mnemonics
n. pl. நினைவாற்றல் பேணுங்கலை, நினைவிருத்தும் ஆற்றலைப் பெருக்குவதற்கான முறை.
Mnemotechnic
a. நினைவிருத்தற்குத் துணைசெய்கிற.
Moa
n. மரபற்றுப்போன நியூசிலந்து நாட்டுப் பெரும்பறவை வகை.
Moan
n. முனக்கம், புலப்பம், வேதனைக்குரல், (வினை) ஏங்கு, இரங்கியப, புலம்பிக்கொண்டே பேசு, கருதி வருந்து, நினைந்து புலம்பு.
Moat
n. அகழ், அரண்சூழ் கிடங்கு, (வினை) அகழெனச் சூழ்.
Mob
n. மக்கட்கும்பல், கொந்தளிக்குங் கூட்டம், கலகக்கும்பல், கீழ்மக்கள் வகுப்பு, கீழினம், பலவகை மக்கள் திரள், கும்பல், கீழ்மக்கள் வகுப்பு, கீழினம், பலவகை மக்கள் திரள், (வினை) திரண்டு நெருங்கித்தாக்கு, ஆரவாரித்துச் சூழ், திரண்டெழுந்து தொல்லைகொடு, கும்பலாகத்திரளு.
Mob-cap
n. மகளிர் தலைமுழுவதையும் மூடும் மனையகக் குல்லாய்வகை.
Mobile
a. இயங்குகிற, அசையக்கூடிய, நிலையாககப் பொருத்தப் பெற்றிராத, தங்குதடையற்று அசைவதற்குரிய, மிக எளிதில் மனம் மாறுதலடைகிற, படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய.
Mobility
n. அசையும் தன்மை, எளிதில் இயங்கும் தன்மை, இடம் பெயர்வாற்றல்.
Mobilize
v. அசையும்படி செய், புடைபெயர்வி, புழக்கத்துக்குக் கொண்டு வா, படைதிரட்டு, போருக்கெனப் படைகளை ஆயத்தனமாக்கு.
Mobocracy
n. கும்பலாட்சி, கும்பலாதிக்கம்.
Moccasin
n. பதனிட்ட மான்தோல் செருப்பு வகை.
Mocha
-1 n. மணிக்கல் வகை.
Mocha(2), Mocha coffee
n. மிகநேர்த்தியான காப்பி.
Mock
n. ஏளனம், நையாண்டி, ஏளனச் செயல், ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, போலி, கேலி, இகழ்ச்சி, (பெயரடை) நையாண்டிப் போலியான, பாசாங்கான, (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு, ஏளன நையாண்டி செய், கிண்டல் செய், போலிசெய்து நகையாடு, நடிப்புப் போலிசெய், கிண்டல் செய், போலிசெய்து நகையாடு, நடிப்புப் போலிசெய், போலி நடிப்பு நடித்துக்காட்டு, நங்கு காட்டு, நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு, எதிர்த்துக் கேலி நகையாடு, ஏய்த்துக் கொக்கரி, அலைக்கழிப்பூட்டு.