English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Non-human
a. மனித இனத்தைச் சேராத.
Nonillion
n. ஓரிலக்கம், கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்று தொடர்ந்த 54 சுன்னங்களையுடைய பேரெண்.
Non-intrusion
n. ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை.
Non-invtervention
n. தலையிடாக் கொள்கை, பிறநாட்டுச் சச்சரவுகளில் தலையிடாமை.
Non-joinder
n. (சட்.) வழக்கில் பங்காளர் அனைவரையும் சேர்க்காமை.
Nonjuror
n. பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
Non-jury
a. முறைகாண் ஆய்த்தினர் உதவியற்ற வழக்கு விசாரணை சார்ந்த.
Non-logical
a. அளவைமுறையின்றிப் பெறப்பட்ட, அளவைசாரா முறையான.
Non-member
n. உறுப்பினரல்லாதவர்.
Non-metal
a. உலோகமல்லாத தனிமம்.
Non-moral
a. ஒழுக்கமுறை சாராத, ஒழுக்கநெறித் தொடர்பில்லாத.
Non-natural
a. இயல்நெறித் திறம்பிய.
Nonpareil
n. தனி ஒருவர், ஈடிணையற்றவர், தனிநிலைப் பொருள், ஈடெடுப்பற்றது, (அச்சு.) அச்செழுத்து அளவு வகை, இனிப்புத் தின்பண்ட வகை, சீமை இலந்தைப்பழ வகை, பறவை வகை, கோதுமை வகை, அந்துப்பூச்சி வகை.
Non-party
a. கட்சிச் சார்பற்ற, அரசியல் கட்சிப்பற்று நீக்கிக் கவனிக்க வேண்டிய.
Nonplus
n. திகைப்புநிலை, தடுமாற்றம், தத்தளிப்பு, குழப்பநிலை, செயலற்ற நிலை, (வினை.) திகைக்க வை, தடுமாற்றமூட்டு.
Non-provided
a. தொடக்கப்பள்ளி வகையில் திணைநில அரசியல் ஆதரவு பெறாத.
Non-resident
n. புறக்குடியிருப்பாளர், உடனுறைவற்ற சமயகுரு, உடனுறைவற்ற சமய அலுவலர், வேறிட வாழ்வுடையவர், தற்காலிக குடியிருப்பாளர், (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற, உடனுறைவற்ற, வேறிட வாழ்வுடைய, நீடித்துக் குடியிராத.
Non-resistance
n. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை.
Nonsense
n. முட்டாள்தனம், பொருத்தமற்றது, ஒப்புக் கொள்ளத் தகாதது, என்ன முட்டாள்தனம்ஸ் சீஸ் பொருத்தக்கேடானதுஸ்.
Nonsense-book
n. அறியாப்பருவ ஏடு, கருத்தற்ற வெறும் நகைத்துணக்கேடு.