English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Non-collegiate
n. மாணவர் வகையில் கல்லூரி சாராத, பல்கலைக்கழக வகையில் கல்லூரிகளில்லாத.
Non-combatant
n. போரிடாத துறையைச் சார்ந்தவர், படைத் துறை சாராப் பொதுமகன்.
Non-commissioned
a. படைத்துறைப்பதவி வகிக்காத.
Non-committal
n. பொறுப்போலாச் சமநிலை, ஒருபாலும் சாராமல் விலகிநிற்குந் தன்மை, (பெ.) பொறுப்பபேலாத, கட்டுப் படுத்திக் கொள்ளாத.
Non-communicant
n. நற்கருணை வழிபாட்டுக்குச் செல்லாதவர்.
Non-conducting
a. மின்வலி ஊடுசெல்லாத, இகைப்புத் திறனற்ற, வெப்பத்தையோ மின்வலியையோ கொண்டு செல்லாத.
Nonconformist
n. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்.
Nonconformity
n. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
Non-content
n. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் தீர்மானத்துக்கு எதிரிடையாக வாக்களிப்பவர்.
Non-co-operation
n. ஒத்துழையாமை, பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்
Nondescript
n. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான.
None
pron யாருமிலார், (பெ.) ஒன்றுமில்லாத, (வினையிடை.) ஒரு சிறிது கூட இல்லாததாக.
Non-effective
a. படைவீரர்-மாலுமிகள் வகையில் படைத் துறைப்பணிக்குத் தகுதியற்ற.
Non-ego
n. நானல்லாதது, புறப்பொருள், தான் அறியாது அறியப்படும் பொருள்.
Nonentity
n. இல்பொருள், பொருளன்மை, கட்டுக்கதை, கற்பனை, மதிப்பு ஏதுமற்றவர், மதிப்பில்லாத பொருள், இன்மையெண் குறி.
Nones
n.pl. பண்டை ரோமர் வழக்கில் மார்ச்சு முதல் ஒன்று விட்ட மாதங்களில் ஹ்-ம் மற்ற மாதங்களில் 5-ம் ஆகிய விழாநாள், பிற்பகல் மூன்று மணிக்குரிய திருக்கோயில் வழிபாடு.
Nonet
n. (இசை.) ஒன்பது இசைக்கருவிகளுக்கான பாட்டு வகை, ஒன்பது குரல்களுக்கான பாட்டு வகை.
Non-euclidean
a. வடிவியலில் பண்டைய கிரேக்க அறிஞரான யூக்ளிட் மேற்கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பான.
Non-feasance
n. (சட்.) செய்யத்தக்க செய்யாப் பிழைபாடு.
Non-flammable
a. எளிதில் தீப்பற்றாத.