English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Opiate
n. அபின் கலந்த தூக்கமருந்து, அபின் கலந்த நோவாற்று மருந்து, (பெயரடை) அபின் கலந்த, தூங்க வைக்கிற, மயக்கமூட்டுகிற, (வினை) அபினுடன் கல.
Oping
v. கருது, எண்ணங்கொள்,. கருத்துத்தெரிவி.
Opinion
n. கருத்துரை, எண்ணம், மதிப்பீடு, நம்பிக்கை, நடைமுறைக் கொள்கை, கருத்து வேறுபாடு, பொதுக்கருத்து, தற்காலிகத் துணிவு, தனிப்பட்ட கருத்து, கொள்கை, கோட்பாடு, நிபுணரின் கருத்து அறிவிப்பு, தொழில்முறை ஆலோசனை, நன்மதிப்பு.,
Opinionated, opinionative
a. கொள்கைப் பிடிவாதமுடைய, முரட்டுப்பிடியான, தன்முபுள்ள, ஆணவமிக்க.
Opisometer
n. வணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி.
Opisthograph
n. இருபுறமும் எழுதப்பெற்றுள்ள திண்ணியதாள், இருபக்கங்களிலும் எழுத்துச் செதுக்கப்பெற்றுள்ள கற்பாளம்.
Opium
n. அபினி, கம்புகம், (வினை) அபினி மருந்திடு, அபினுட்டிப் பண்டுவஞ்செய்.
Opodeldoc
n. சவர்க்காரப் பூச்சுத் தைல வகை.
Opopanax
n. முற்கால மருந்துப் பிசின் வகை, நறுமணப் பிசின்வகை.
Opossum
n. பைக்கீரி, மரம் அல்லது நீரில் வாழ்ந்து இரவில் நடமாடும் மதலைப்பையுடைய அமெரிக்க அல்லது ஆஸ்திரேலிய சிறு விலங்கு வகை.
Oppidan
n. நகரத்தினர், ஈட்டன் கல்லுரி இல்லத்தில் தங்காது நகர உணவுவிடுதியில் தங்கிப் பயிலும் மாணவர், (பெயரடை) நகரஞ் சார்ந்த.
Oppilate
v. (மரு) வழியடை, துளை தூர்த்துவிடு.
Opponent
n. எதிரி, பகை, (பெயரடை) எதிர்க்கிற, மாறான, முரண்பட்ட, பகையான.
Opportune
a. தறுவாய்க்கு ஏற்ற, வேளை வாய்ப்பான, தக்கவேளையில் வந்தமைந்த, பொருத்தமாக வந்துசேர்ந்த, ஆங்காலமான, காலத்தினாற் செய்த, செவ்வி வாய்த்த.
Opportunism
n. வேளை வாய்ப்பு வாதம், காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை, வாய்ப்பு வேட்டை, சந்தர்ப்பவாதம், கொள்கைப்பேரம், சமயசஞ்சீவித்தன்மை, வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Opportunist
n. வாய்ப்பு வேட்டையாளர், சந்தர்ப்பவாதி, வேளைக்கூத்தர், சமயசஞ்சீவி, அரசியல் பச்சோந்தி, வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர், நிலையான கொள்கையற்றவர்.
Opportuntiy
n. செவ்வி, தறுவாய், தக்க சமயம், வேளைவாய்ப்பு, வாய்ப்பு வேளை, நல்வாய்ப்பு, வாய்ப்பு வழி, வழிதிறப்பு.
Oppose
v. எதிர், எதிர்த்து நில், மாறாயிரு, எதிரீடாக்கு, எதிராக வை, எதிர்த்துரை, தடு, தடை செய், தடங்கல் கூறு, தடுத்துரை.
Opposed
a. எதிரான, மாறான, முரண்பட்ட, பகையான.
Opposeless
a..(செய்) தடுக்கமுடியாத, எதிர்த்து வெல்லமுடியாத.