English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Opposite
n. மறுதலை, எதிர்மாறான பொருள், முரண், எதிர்ப்பண்பு, எதிர்ச்சொல், எதிரி, (பெயரடை) எதிரான, மறுதலைப்பண்பு வாய்ந்த, எதிர்மாறான, மற்றிலும் வேறுபட்ட, நேர் எதிரான, எதிரிணையான, நேருக்கு நேரான, எதிர் முகமான, எதிர்ப்பக்கத்திலுள்ள, எதிர்நிலையான, முற்றும் மாறான, (வினையடை) எதிரே, எதிர்ப்பக்கத்தில், எதிர்த்திசையில், எதிரிணையாக, எதிரில், எதிர்ப்பக்கத்தில்.
Oppositifolious
a. (தாவ) இலைகளைத் தண்டின் எதிர்ப்புறங்களில் இரண்டிரண்டாக உடைய.
Opposition
n. எதிரீடு, முற்றும் எதிரான நிலை, வேறுபாடு, முரண், எதிர்முரண், பகைமை, எதிர்ப்பு, பகைநிலை, எதிர்க்கட்சி, (அள) மறிநிலைத் தொடர்பு, ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Oppositionist
n. எதிர்க்கட்சி உறுப்பினர், (பெயரடை) எதிர்ப்பாகவுள்ள.
Oppositisepalous
a. (தாவ) புல்லிக்கு நேரெதிராக மலரிழையுடைய.
Oppress
v. அழுத்து, அமுக்கு, நெருக்கு, ஒடுக்கு, அடர், கொடுங்கோலாட்சி புரி, வலுக்கட்டாயமாக அடக்கிவை, கொடுமைப்படுத்து.
Oppression
n. அநீதி, அட்டூழியம், கொடுமை, அடக்குமுறை, கொடுங்கோன்மை, பெருந்துயர உணர்ச்சி, தாங்கொணாத் துன்பநிலை, ஊக்க இழப்பு.
Oppressive
a. கொடிய, பீடையான, ஒறுக்கும் பாங்குடைய, பெருஞ்சுமையாயுள்ள, கொடுங்கோன்மையான, அடக்கியாள்கிற.
Oppressor
n. கொடியோன், கொடுங்கோலன், பாதகன், கண்டகன்.
Opprobrious
a. இகழ்ச்சியான, வைதுரைக்கிற, அவதூறான, பண்பிழந்த.
Opprobrium
n. கெட்டபெயர், வசை, பழி, இகழுரை, இழிவு.
Oppugn
v. மறுத்துரை, எதிர்த்துக்கூறு,. தடங்கல் உரை.
Oppugnant
n. எதிரி, மாற்றான், (பெயரடை) எதிர்க்கிற, பகையான.
Opsimathy
n. முதுமையிற் கற்ற கல்வி.
Opsonic
a. நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற.
Opsonin
n. நோயாளி உடலில் அழிந்த நோய் நுண்மங்களைச் செலுத்துவதால் விளைவிக்கப்படும் பொருள்.
Opt
v. விருப்பத்தைத் தெரிவி, தெரிந்தெடுத்துக்கொள்.
Optative
n. (இலக்) விளங்கோள், (பெயரடை) விருப்பத்தை உணர்த்துகிற.
Optic
a. (உள்) கண் சார்ந்த, கட்வுலனுக்குரிய.
Optical
a. கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்பார்வைக்கும் ஔதக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த, ஔதயியல் சார்ந்த, பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட, ஔதநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட.