English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Opticals
கண்ணாடியகம், மூக்குக் கண்ணாடியகம்
Optician
n. மூக்குக்கண்ணாடி செய்பவர், மூக்குக்கண்ணாடி விற்பவர்.
Optician
கண்ணாடியாளர், மூக்குக் கண்ணாடி விற்பனையாளர்
Optics
n. pl. கண்ணொளியில், காட்சியொளிசார்ந்த, ஆய்வு நுல்.
Optime
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர்.
Optimism
n. இனிமை நம்பிக்கை, இன்மகிழ், நலம், இன்பமே எதிலும் எதிர்பார்க்கும் மனநலன், நல்லார்வ நலம், எதிலும் நற்கூறே காணும் இனிய மனவளம், இந்நிலவுலகமே வாழ்வதற்கு மிகச் சிறந்ததென்ற லேப்னிட்ஸ் என்ற மெய்விளக்க அறிவரின் கொள்கை, படைப்பு முழுமையிலும் முடிவாக நன்மையே வெல்லும் என்னுங் கருத்து.
Optimist
n. இன்முகச்செவ்வியர், அனைத்திலும் ந்னமையே காண்பவர்.
Optimistic
a. இன்மகிழ் நலமார்ந்த, எதிலும் நலமே காண்கிற, தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள.
Optimum
n. உயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.
Option
n. விருப்பம், விருப்பத்தேர்வு, தெரிந்தெடுப்புரிமை, தெரிந்தெடுக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்படக்கூடியது, விருப்பம் தெரிவிக்கும் உரிமை, பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை.
Optional
a. விருப்பப்படியான, கட்டாயமற்ற.
Optometer
n. விழிக் காட்சியாற்றல் எல்லைத்தேர்வாய்வுக் கருவி.
Optometrist
n. விழிப்பார்வைத் தேர்வாய்வாளர்.
Optophone
n. குருடர்கள் எழுத்தினை வாசிக்கச்செய்யும் வகையில் ஔதயை ஒலியாக மாற்றுங் கருவி.
Opulence
n. பொருள் வளம், செல்வ நிறைவு, வளமை, செழுமை.
Opulent
a. செல்வமிக்க, பொருள்வளமுடைய, செழுமையான, தாராளமான, சேமவளமுடைய.
Opus
n. இசை-இலக்கிய எழுத்தாண்மைத் துறைகளில் கலை ஆக்கப்படைப்பு.
Opuscule, opusculum
சிற்றிலக்கியப் படைப்பு, சில்லறை இசைப்பாடல்.
Or
-1 n. (கட்) மரபுவழிச் சின்னங்களிற் செதுக்கிய புள்ளிகளால் காட்டப்பெறும் மங்கலான பொன் அல்லது மஞ்சள் நிறம்.
Or(2), conj.
அல்லது, இரண்டில் ஏதோ ஒன்றாக, என்பவற்றுள் ஏதோ ஒன்றாக, அதாவது, அல்லாவிட்டால்.