English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pole
-3 n. போலந்து நாட்டினன்.
Pole-ax, pole-axe
கண்ட கோடரி, மழுப்படை, முற்காலப் படைக்கப்பற் கோடரி, சூர்க்கோடரி, ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம், இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி.
Polecat
n. மரநாய், கீரியினத்ததைச் சேர்ந்த விலங்குவகை.
Pole-jumping
n. கழி தாண்டல், நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல்.
Polemarch
n. (வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர், ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்.
Polemic
n. வாதம், வாத உரைஞர், வாதத்திற்குரிய நுல், (பெ.) வாதத்திற்குரிய.
Polemics
n. pl. விவாதக்கலை, விவாதப்பயிற்சி, சமயவாதத்துறை.
Polenta
n. மரக்கலவைக் கஞ்சி, சவ்வரிசிமாவும் வாதுமை போன்ற கொட்டை மாவும் கலந்து காய்ச்சப்பெற்ற இத்தாலிய நாட்டுக் கஞ்சி வகை.
Pole-star
n. வடமீன், துருவ நட்சத்திரம், வழிகாட்டியாக விளங்குவது, கவர்ச்சி மையம்
Police
n. காவல்துறை, நகர அமைதிகாக்கும் முறை, பொது அமைதிகாப்புத் துறை, காவல்துறைப்படை, காவல்துறையினர் தொகுதி, (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய், ஒழுங்கமைவாட்சி நடத்து, ஒழுங்கு நிலை நாட்டு.
Police-court
n. காவல்துறை நீதிமன்றம்.
Police-magistrate
n. காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர்.
Policeman
n. காவல்துறையாள்.
Police-office
n. காவல்துறை அலுவலகம்.
Police-officer
n. காவல்துறை அதிகாரி.
Police-station
n. காவல் நிலையம்.
Police-trap
n. காவல்துறைஞர் வலை, தானியங்கு வாகன வேக மறைவுமானி.
Policlinic
n. தனிநிலை மருத்துவப் பயிற்சிமனை, மருத்துவ மனையிலன்றித் தனிமனையிலுள்ள மருத்துப் பயிற்சிக்கூடம், மருந்தக வௌதயாள் பண்டுவப் பகுதி.
Policy
-2 n. காப்பீட்டுத் துறையில் காப்புறுதிப் பத்திரம், காப்பீட்டு ஒப்பந்த இதழ்.
Policy
-1 n. அரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம்.