English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Poliomyelitis
n. (மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி, இளம்பிள்ளை வாதம்.
Polish
-1 n. மெருகு, மினுமினுப்பு, தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு, தேய்ப்பு, தேய்ப்புப்பொருள், பண்பட்ட தன்மை,(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு, மெருகேற்று, வழவழப்பாக்கு, துலக்கு, மினுக்கு, நேர்த்தியாக்கு, பண்பாடுடையதாக்கு.
Polish
-2 n. போலந்துநாட்டு மொழி, போலந்து நாட்டினர், (பெ.) போலந்து நாட்டிற்குரிய, போலந்து நாட்டைச் சார்ந்த.
Polish works
வழைப்பேற்றப் பணிகள், மெருகூட்டும் பணி, பளபளப்புப் பணிகள்
Politarch
n. (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
Politcize
v. அரசியல் வாதியாக நடி, அரசியலில் ஈடுபடு, அரசியலைப் பற்றிச் பேசு, அரசியற் பண்பேற்று, அரசியல் சார்ந்த தாக்கு.
Politic
n. அறிவுக் கூர்மையுள்ளவர், நுட்ப மதியினர், ஊகி, சூழ்ச்சித் திறமுடையவர், (பெ.) அறிவுக்கூர்மையுடைய, நுட்ப மதியுடைய, ஊகமுள்ள, முன்மதி வாய்ந்த, சூழ்ச்சித் திறமுடைய, செயல்வகைத் திறமுடைய, செயல் நாயமுடைய, சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Political
n. அரசியல் மேலாண்மைப் பேராள், (பெ.) அரசுக்குரிய, நாட்டாட்சிக்குரிய, பொது ஆட்சித்துறைக்குரிய, அரசியல் சார்ந்த, அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான, ஆட்சிமுறையில் ஈடுபட்ட, அரசியல் கட்சி சார்ந்த, அரசியல் கட்சியில் ஈடுபட்ட.
Politician
n. அரசியல் வாதி, அரசியல் அறிஞர், அரசியல் வல்லுநர், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர், அரசியல் கட்சியிலீடுபட்டவர், அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர், சூழ்ச்சிக் காரர்.
Politico-religious
a. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த.
Politics
n. pl. ஆட்சியியல், அரசியல்துறை ஆய்வியல், அரசியற் கலை, ஆட்சிமுறை, அரசியற் கோட்பாடுகள்.
Polity
n. ஆட்சி அமைதிநிலை, ஆட்சி அமைப்பொழுங்கு, ஆட்சி அமைப்புமுறை, அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம், அரசு, ஆட்சிக்குரிய இனக்குழு.
Polk
n. பொகீமியா நாட்டின் கிளர்ச்சிமிக்க நடனவகை.
Poll
-1 n. தலை, மனிதத்தலை, முடிவளருந் தலைப்பகுதி, மீன் வகையின் தலை-தோள் பகுதி, சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி, ஆள், தனியாள், தேர்தல் வாக்களர் பட்டியல், தேர்தல் வாக்களிப்பு, தேர்தல் வாக்கெண்ணிக்கை, (வினை.) முடிகத்தரி, திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்
Poll
-2 n. மோழை எருது, கொம்பற்ற எருதுவகை, (பெ.) சரிசமமாக வெட்டப்பட்ட, உச்சி தறிக்கப்பட்ட, கொம்பு தறிக்கப்பட்ட, கொம்பற்ற.
Poll
-3 n. தத்தை, கிளியின் மரபு வழக்குப்பெயர்.
Poll
-4 n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் பொதுவகைத்தேர்வு.
Pollam
n. பாளையம், பாளையக்காரரின் பண்ணை.