English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Polygenesis
n. பல்வேறு மூலவினத் தோற்றம், பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம்.
Polygenetic, polygenic
நீரகம் முதலியவற்றோடு இணைந்து ஒன்றிற்கு மேற்பட்ட சேர்மங்கள் ஆக்கவல்ல.
Polygenism
n. பன்மூல மன்மரபியல் கோட்பாடு, பலதனிவேறு இணைதுணைகளான மூதாதையர்களிடமிருந்து மனிதவினம் தோன்றிற்று என்னுங் கொள்கை.
Polygenist
n. பன்மூல மன்மரபியல் கோட்பாட்டாளர்.
Polygeny
n. பன்மூல மன்மரபு, மனிதவின வகையில் பல தனிவேறான இணைதுணையான மூதாதையர்களிடமிருந்து தோன்றுதல்.
Polyglot
n. பன்மொழிகளில் எழுதப்பட்ட நுல், பன்மொழியாளர், (பெ.) பன்மொழிகளான.
Polygon
n. பல்கோணக் கட்டம், நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்.
Polygonal
a. பல்கோணக்கட்ட வடிவான, பல்கோணக் கட்டஞ் சார்ந்த, பல பக்கங்களையுடைய.
Polygonum
n. பல்வகைக் களைகளையும் புற்களையும் உள்ளடக்கிய தாவர இனப்பிரிவு.
Polygram
n. பல கோட்டு வடிவம்.
Polygraph
n. பலபடியமைவு, பன்னுலாசிரியர்.
Polygynous
a. பன்மனைவியர் மணமுறை சார்ந்த, பன்மனைவியருடன் வாழ்க்கை நடத்துகிற, (தாவ.) மலர்கள் வகையில் பல சூலகங்கள் உடைய, பல சூலகத் தலைகள் கொண்ட.
Polygyny
n. பன்மனை மணமுறை.
Polyhedron
n. பல்தளப் பிழம்புரு, ஆறுக்கு மேற்பட்ட பல பக்கங்களுடைய கன வடிவம்.
Polyhistor
n. பல்கலை வல்லுநர், பலதிறப்புலவர்.
Polymathy
n. பல்துறை அறிவு.
Polymer
n. (வேதி.) மீச்சேர்மம், ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
Polymeric
a. (வேதி.) மீச்சேர்ம இயலுடைய, சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
Polymerism
n. (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Polymerization
n. (வேதி.) மீச்சேர்ம இணைவு.