English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Posteen
n. செம்மறியாட்டின் கம்பளி நீக்கப்பெறாத ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய பெரிய முழு மேலங்கி.
Postentry
n. குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு, கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு, பிந்துகுறிப்பு.
Poster
n. விளம்பரத்தட்டி, விளம்பரங்களை ஒட்டுபவர், காற்பந்தாட்ட வகையில் இலக்குக்கம்பத்துக்கு மேலே சென்று இலக்கினை எய்தும்படியான பந்துதைப்பு.
Posterior
n. உடலின் பிற்பகுதி, பிட்டங்கள், (பெ.) பின்னான, தொடர்ச்சியில் பின்வருகிற, பின்பக்கத்திய.
Posterity
n. கால்வழி, சந்ததி, பின்னோர், வழித்தோன்றல்கள், வருமரபு, பின்வருந் தலைமுறைகள்.
Postern
n. பின்புறக் கதவு, புறக்கடை, பக்கக்கதவு, பக்கவாயில்.
Post-exilian, post-exileic
a. யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட.
Post-fix
-2 v. கடைப்பகுதியிற் சேர்.
Post-fix
-1 n. பின்வைப்பு, விகுதி, சொல்லின் பின்னோட்டுக் கூறு.
Post-free
a. அஞ்சற் கட்டணமின்றிக் கொண்டு செல்லப்பட்ட, அஞ்சற் கட்டணம் முன்னரே கட்டப்பட்ட.
Post-glacial
a. (மண்.) பனிப்பேரூழிக்குப் பிற்பட்ட.
Post-graduate
n. பட்டப் பின்பயிற்சி, பட்டம் பெற்றபின் படிப்பு, (பெ.) பட்டம் பெற்ற பின்னான, பட்டத்திற்குப்பின்.
Post-haste
adv. மிகு விரைவுடன்.
Post-horse
n. முற்கால அஞ்சல்முறையில் வழியிடைமாற்றுகுதிரை.
Posthumous
a. இறந்த பின்னான, தந்தை இறந்தபின் பிறந்த, இயற்றியவர் மறைவுக்குப்பின் அச்சிடப்பட்ட.
Postiche
n. வேலைப்பாடு முற்றுப்பெற்றபின் சேர்க்கப்படுவது, சிற்ப வேலையில் பின்னாற் சேர்க்கப்படும் பொருத்தமற்றவேலை, தேவைக்கு அதிகன்ன பின்னிணைப்பு வேலை, கடைச்சரக்கு வகையில் பொய்ம்மயிர், கள்ளமுடி, போலிமுப்ப்பு, (பெ.) போலியான, செயற்கையான, இயற்கையல்லாத.
Posticous
a. (தாவ.) பின்பகுதியிலுள்ள,பின்னான, பின்பக்கத்திய.
Postil
n. (வர.) ஓரக்குறிப்பு, விவிலிய நுலில் ஓரத்தில் எழுதப்படும் விளக்கக்குறிப்பு, விளக்கவுரை, விரிவுரை.
Postilion, postillion
n. மாவூர் வலவன், இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியில் அண்மையிலுள்ள குதிரை மீதிவர்ந்து ஒட்டுபவன்.
Post-impressionism
n. அகவாய்மைப் பண்போவியறறை, பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம்.