English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Postliminy
n. (ரோம, சட்.) மறுசீர்ப்பெறலுரிமை, நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை, மறு சீரமைப்புப் பேறு, அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
Postlude
n. இசை முடிப்பியக்கம், இசைத்துறையில் இறுகித் தற்புனைவியக்கம்.
Postmark
n. அஞ்சல் முத்திரை, (வினை.) அஞ்சல் முத்திரையிடு.
Postmaster
-1 n. அஞ்சல் நிலையத் தலைவர்.
Postmaster
-2 n. ஆக்ஸ்போர்டு சார்ந்த மெர்டன் கல்லுரியின் உதவிச் சம்பள மாணவர்.
Postmastership
n. அஞ்சல் நிலையத் தலைவர் நிலை, அஞ்சல் நிலையத் தலைவர் பதவி.
Post-millennial
a. இயேசுநாதரின் மறுவருகை திருவாயிரத்துக்குப்பின் நிகழும் என்ற கோட்பாடு.
Postmistress
n. அஞ்சல் நிலையத் தலைவி.
Post-mortem
-1 n. சாவிற்குப் பின்னாய்வு. (பே-வ) சீட்டாட்ட வகையில் ஆட்டம் பற்றிய பின்பேச்சு, (பெ.) சாக்காட்டின் பின் செய்யப்படுவதான.
Post-mortem
-2 adv. சாக்காட்டிற்குப் பின்.
Post-natal
a. பிறப்பிற்குப்பின் நிகழ்கிற.
Post-nuptial
a. திருமணத்திற்குப் பிற்பட்ட.
Post-obit
n. மரபுச் சொத்துக்குரிய முன்னவர் இறந்ததும் கொடுத்த வாக்குத்தொகை உரிமை தருகிற கடன் பத்திரம், (பெ.) இறந்த பிறகு நடப்புக்கு வருகிற.
Postoffice
n. அஞ்சல் நிலையம்.
Post-office order
n. பணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
Post-oral
a. வாய்க்குப்பின் அமைந்துள்ள.
Post-paid
a. அஞ்சல் தொகை செலுத்தப்பட்ட.
Post-pliocene
a. மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
Postpone
v. காலங் கடந்து, தள்ளிவை, காலந்தாழ்த்து, முக்கியத்துவங் குறைத்து மதி.