English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Potassium
n. சாம்பரம், மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம், கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.
Potation
n. குடித்தல், குடிதேறல்.
Potations
n. pl. கடுங்குடி,வெறிமயக்கக்குடி.
Potato
n. உருளைக்கிழங்குச் செடி, உருளைக்கிழங்கு.
Potato-ring
n. கலந்தாங்கி, கலச்சும்மாடு.
Pot-belly
n. தொப்பை வயிறுடையவர், வயிறுதாரி.
Pot-boiler
n. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
Pot-bound
a. தொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட, வளர்ச்சிக்கு இடமற்ற.
Pot-boy
n. மதுக்கடைப் பையன்.
Pot-companion
n. கள்வகை நண்பர், மதுக்கூட்டாளி.
Poteen
n. அயர்லாந்து நாட்டு வழக்கில் கள்ள வடிப்புச் சாராயம்.
Potency
n. ஆற்றல், பயனுடைமை, செல்வாக்கு நிறைந்தவர்.
Potent
a. (செய்.) ஆற்றல்வாய்ந்த, மிகப்பெரிய, சிந்தனைவகையில் அறிவுக்குப் பொருத்தமான, கருத்துவகையில் மறுக்கமுடியாத, மருந்து முதலியன வகையில் ஆற்றல்மிக்க.
Potentate
n. ஆளுநர், வல்லுநர்.
Potential
n. (மின.) மின்னுட்ட அளவு, மின் அழுத்த அளவு, நிகழக்கூடியது, மூல வாய்ப்புவளம், உள்ளார்ந்த ஆற்றல், வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம், (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல், (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த, வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள, பின்வள வாய்ப்புடைய, அகநிலைத் தகுதிவாய்ந்த, (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற, இருக்கத்தக்க, செயலுக்கு வரக்குடிய.
Potentiality
n. இயல்திறம், உள்ளடங்கிய ஆற்றல், செயற்படுந்திறம், செயற்படத்தக்க மறை ஆற்றல்.
Potentialize
v. இயல்திறமுடையதாக்க, உள் ஆற்றலுடையதாக்கு, நிலைபேறுடையதாக்கு.
Potentially
adv. இயல் திறமுறையில், கூடியதாக.