English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Powerful
a. ஆற்றல்மிக்க, பெருஞ் செல்வாக்குடைய, திட்பம் வாய்ந்த, செறிவு மிக்க, பயன்விளைவுத்திறம் மிக்க.
Power-lathe
n. இயந்திரக் கடைசலி.
Powerless
a. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத.
Power-loom
n. இயந்திரத் தறி.
Power-mill
n. இயந்திர ஆலை.
Power-station
n. மின் உற்பத்தி நிலையம்.
Powwow
-1 n. வட அமெரிக்க-இந்தியரிடையே மருத்துவர், செவ்விந்தியரிடையே சூனியக்காரர், செவ்விந்தியரின் மந்திர வினைமுறைக் குழு.
Powwow
-2 v. மருத்துவத் தொழில்புரி, மந்திரத் தொழில்புரி, மந்திர வினைமுறைக்குழு நடத்து, மந்திர வினைமுறைக்குழுவில் வாதிடு, மருத்துவஞ் செய், மந்திரம் போட்டுக் குணப்படுத்து.
Pox
-1 n. அம்மை, பெரியம்மை, பயற்றம்மை, கோவைசூரி, (பே-வ) கிரந்தி நோய்.
Pox
-2 n. பாக் என்பதன் பன்மை.
Pozzolana, pozzuolana
n. சீமைக்காரை வகையில் பெரிதும் பயன்படும் எரிமலைச் சாம்பல்.
Practicable
a. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Practical
a. செயல்முறை சார்ந்த, நடைமுறைக்குரிய, அனுபவத்தில் தெரிகிற, காரிய சாத்தியமான, காரியத்துக்குப் பயன்படுகிற, தொழிலில் ஈடுபட்டிருக்கிற, தொழில் புரிகிற, மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள, செயல்துறையில் உண்மையான.
Practically
adv. நடைமுறையில், உண்மையாக, கிட்டத்தட்ட, பெரும்பாலும்.
Practice
n. பழக்கம், வழக்கமான செயல், சட்ட நடைமுறை ஒழுங்கும, வாடிக்கை, நீடித்த பயிற்சி, பயிற்சித்தொடர்பு, வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி, கடைக்கணக்குமுறை, விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை.
Practician
n. தொழில் நடத்துபவர், செயல்முறைக்கு ஒத்தவர்.
Practise
v. செயற்படுத்து, வழக்கமாகச் செய்துகொண்டிரு, தொழில் நடத்து, தொழில்புரி, கலை-கருவி முதலியவற்றில் பயிற்சி மேற்கொள், பழக்கு, பழகு.
Practised
a. பயிற்சி மூலமாகத் திறமைபெற்றுள்ள.
Practitioner
n. வழக்குரைஞர், மருத்துவர்.
Praecocial
a. புனிற்றோட்டமுடைய, பறவை வகையில் முட்டையிலிருந்து வௌதவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய.