English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prank
-1 n. குறும்பு விளையாட்டு, சிறு குறும்பு, நையாண்டிக்குறும்பு, இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம்.
Prank
-2 v. ஒப்பனைசெய், அலங்கரித்துக்கொள், மலர்கள் முதலியவற்றால் அணிசெய்.
Prase
n. பச்சைப் படிகக்கல் வகை.
Pratie, praty
ஆங்கிலோ-ஜரிஷ் வழக்கில் உளக்கிழங்கு.
Pratincole
n. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
Pratique
n. தொற்று நீக்கச்சீட்டு, தொற்றுநோய் ஒதுக்கீட்டுக்குப்பின் கப்பலுக்கு வழங்கப்படும் துறைமுப்த் தொடர்புரிமைச்சீட்டு.
Prattle
n. குதலை, (வினை.) குதலை பேசு.
Prattler
n. குதலைப் பேச்சினர், குழந்தை.
Pravity
n. உணவு வகையில் கெட்டுப்போன நிலை, கொடுமை.
Prawn
n. இறால் மீன், (வினை.) இறால்மீன் பிடி.
Praxis
n. எடுத்துக்காட்டு, வழக்கம், (இலக்.) பயிற்சிக்கான எடுத்துக்காட்டு வாய்பாடுகள்.
Pray
v. வழிபடு, வேண்டுதல் செய், விண்ணப்பித்துக்கொள், வேண்டு, இசைவுகோரு, மன்றாடு, குறையிர, கெஞ்சிக்கேள்.
Prayer
-1 n. இறைவணக்கம், வழிபாட்டுமுறை, இறையதருள் வேண்டுதல், வழிபாட்டு வாசகம், இறைவணக்க வாய்ப்பாடு, வேண்டுகோள், முறையீடு, விண்ணப்பம், வேண்டப்படும் பொருள்.
Prayer
-2 n. இறைவணக்கஞ் செய்பவர், வேண்டிக்கொள் பவர்.
Prayer-book
n. வழிபாட்டு ஏடு.
Prayerful
a. இறைவணக்கஞ் செய்யும் பாங்குள்ள கடவுள் வழிபாட்டொழுக்கமுடைய.
Prayer-meeting
n. தொழுகைக் கூட்டம்.
Prayer-wheel
n. தருமசக்கரம், திபேத்திய பௌத்தர் வழிபாட்டு வாசகம் பொறித்த சுழல்நீள் உருளை.
Preach
n. அறவுரை, திருக்கோயில் மேடைப்பேச்ச, (பே-வ) வலிந்த நீதிபோதனை, (வினை.) சமயச் சொற்பொழிவாற்று, அறவுரை கூறு, வலியப் போய் நீதிபோதனை செய், சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு, சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Preacher
n. சமய போதகர், சமயச் சொற்பொறிவாளர், சமயகுரு, ஆதரவாளர், மன்றாடி.