English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Precedence, precedency
n. முந்துநிலை, காலத்தால் முற்பட்ட தன்மை, வரிசையில் முன்னிடம், மேம்பாடு, மேம்பட்ட இடம், முற்படுதகுதி, முதன்மை, முந்துரிமை, முன்னிகழ்வு, முன்னுரிமை.
Precedent
-1 n. முன்னோடி மாதிரி, முன்னோடி நிகழ்ச்சி, முன்நிகழ்வுச் சாக்கு போக்கு, (சட்.) முற்சான்று, முன்மாதிரிக் கட்டளை.
Precedent
-2 a. முற்போந்த முன்னிகழ்வான, முந்திய உயர்படியான.
Precedented
a. முன்னோடி நிகழ்வுடைய, முன்னிகழ்வாதாரமுடைய, முற்சான்றுடைய.
Precent
v. இசைக்குழத் தலைவனாகச் செயலாற்று.
Precentor
n. இசைக்குழுத் தலைவன், (வர.) திருச்சபைக் குழுவில் தன் கடமையைப் பகர ஆளுக்கு விட்டுச்செல்லும் உரிமை படைத்திருந்த முற்கால உறுப்பினர்.
Precept
n. கட்டளை, நீதி வாசகம், முதுமொழி, நல்லொழுக்கப் போதனை, தெய்விக ஆணை, எழுத்துமூலமான உத்தரவு, பற்றாணை, தேர்தலுக்கு ஏற்பாடு செய்து நடத்துவதற்கான எழுத்துமூலக் கட்டளை, குறிப்பிட்ட தவணைவீதப்படி பணம் திரட்டுவதற்கு அல்லது செலுத்துவதற்குரிய ஆணைக்கோரிக்கை.
Preceptor
n. ஆசான், குரு.
Preceptory
n. (வர.) புனித யாத்திரைக் காவற்பணிமேற்கொண்ட சமயத் தொண்டர் படைக்குழுவின் துணைநிலைப் பிரிவினர், சமயத் தொண்டர்படைத் துணை நிலைப் பிரிவினர்க்குரிய மனையிடம், சமயத்தொண்டர் படைத்துணை நிலைப் பிரிவுநிலை.
Precession
n. முந்துகை, (வான்.) பூர்வாயணம், புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு.
Pre-Christian
a. இயேசுநாதருக்கு முற்பட்ட, கிறித்தவ சமயம் மேம்படுதற்கு முந்திய.
Precinct
n. எல்லைக்கோடு, எல்ல வரையறைப்பட்ட இடம், மதிலக வட்டாரம், தேர்வித்தொகுதியெல்ல, வட்டம், மாவட்டப்பகுதி.
Precincts
n. pl. சூழிடங்கள், சுற்றுப்புற இடங்கள், கோட்ட எல்லை.
Precious
a. மதிப்புமிக்க, அருமந்த, மொழி-வேலைப்பாடு முதலியவற்றில் செயற்கைச் செப்பம் வாய்ந்த, (பே-வ.) மிகைப்பட்ட, அரிதாக, வழக்கமீறி.
Precipice
n. கொடும் பாறை, செங்குத்துப் பாறை.
Precipitance, precipitancy
n. குப்புற வீழ்வு, பதற்றப் பண்பு, முன்பின ஆராயாமை, தேராச்சொல்.
Precipitant
-1 n. கரைசலிற் படிகம் உண்டுபண்ணும் நீர்மம்.
Precipitant
-2 a. தலைகீழாக விழுகிற, தொப்பென்று விழுகிற, கடுவேகமாகப் பாய்கிற, திடீர் வேகமான.
Precipitate
n. (வேதி.) கரைசலின் மண்டிப்படிவு, (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு, (பெ.) தலைகீழான, கடுவேகமாக விரைகிற, ஆள் வகையில் பதற்றமான, செயல்வகையில் முன்பின் ஆராயாத, மடத்துணிச்சலான, (வினை.) தலைகீழாக வீசு, கடு வேகமாக எறி, மிகு விரைவுபடுத்து, அவசரப்படுத்து, விரைவில் நிகழ்வி, (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய், ஆவியைக் குளிரால் உறைவி.
Precipitation
n. தலைகீழ் எறிவு, குப்புறு வீழ்ச்சி, தெறிப் பாய்ச்சல், திடீர் உணர்ச்சிநிலை, திடீர் உணர்ச்சிச்செயல், படுவிரைவு, மட விரைவுத் துணிச்சல், படி வண்டல், வண்டற் படிவு, வண்டல் வடிப்பு, படிவாக்கம், படிவுப்பொருள், திடீர் உறைவு, மழை, கல்மழை, பனி வீழ்ச்சி, பனிப்பெயல், மழைவீழ் அளவு.