English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Praemunire
n. (சட்.) கட்டளையழைப்பு, இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை.
Praepostor
n. மாணவர் தலைவர், சட்டாம்பிள்ளை.
Praetor
n. (வர.) தண்டலர், ரோமரிடையே ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சித் தலைமைப் பொறுப்பிற் பங்கு கொண்டிருந்த குற்றவியல் நடுவர்.
Praetorian
n. ரோமர் குற்றவியல் நடுவர், படித்தரமுடையவர், ரோமப் பேரரசரின் மெய்க்காவல் படைவீரர், (பெ.) ரோமர் குற்றவியல் நடுவர் சார்ந்த, ரோமப் பேரரசரின் மெய்க்காவற்படை சார்ந்த.
Pragmatic
a. பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன் நாட்டமுடைய, வரலாற்று, நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற, நாட்டரசின் வினைகள் பற்றிய.
Pragmatical
a. பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
Pragmatism
n. பிறர் செயலில் உரிமையின்றித் தலையிடுதல், கல்விச்செருக்கு, செயல்துறைப் பயன்நாட்டமுடைமை, காரியவாதியாயிருக்குந்தன்மை, (மெய்.) பயனீட்டுவாதம், மனித நலனுக்குப் பயன்படுகிற அளவிற்கு ஒன்றினை மதிப்பிடவேண்டுமென்னுங் கோட்பாடு.
Pragmatist
n. பிறர் செயலில் தலையிடுபவர், கொண்டது விடாதவர், கல்விச் செருக்குடையவர், தன்முனைப்புள்ளவர், பயனீட்டுக்கோட்பாட்டாளர், பயனீட்டுவாதத்தில் நம்பிக்கையுடையவர்.
Pragmatize
v. மெய்யாகக் குறித்துக்காட்டு, பகுத்தறிவுக்கு ஒத்ததாக்கு, நேர்மைக்கிணங்க வை.
Prairie
n. மரமற்ற பரந்த வௌத, அலை போன்ற பரப்புடைய புல்வௌத.
Prairie-chicken
n. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
Prairie-dog
n. நாய்போல் குரைக்கும் வட அமெரிக்க கொறிவிலங்கு வகை.
Praise
n. புகழ்ச்சி, பாராட்டு, புகழ்தல், (வினை.) புகழ், மெச்சு, போற்று, பராவு, துதி.
Praiseworthy
a. புகழ்தற்குரிய, பாராட்டத்தக்க.
Prakrit
n. பிராகிருதம், பாகதம், சம்ஸ்கிருழ்த் திரிபாயுள்ள அல்லது தொடர்பாயுள்ள பேச்சுவழக்கு மொழிகளுள் ஒன்று.
Praline
n. வாதுமை இனிப்புப்பிட்டு.
Pram
-1 n. சரக்கேற்றும் தட்டை அடிப்பாகமுடைய படகுவகை, பீரங்கிகள் ஏற்றப்பட்ட தட்டைப்படகு வகை, ஸ்காண்டினேவிய கப்பலின் படகு.
Pram
-2 n. (பே-வ.) தள்ளுவண்டி, கைவண்டி.
Prance
n. பின்கால்மீது துள்ளிக்குதிப்பு, தாவு நடை, எழுச்சிமிக்க நடை, துள்ளலியக்கம், (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய், துள்ளி நட, துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல், இறுமாப்பு நடைபோடு, பகட்டுநடை நட, வீறாப்புக்காட்டு.
Prandial
a. சாப்பாட்டிற்குரிய.