English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prehensile
a. பற்றிப்பிடிக்கத்தக்க, பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த.
Prehension
n. பற்றுகை, பிடிப்பு, மனம்பற்றுகை, அறிதல், உணர்வு.
Prehistoric
a. தொல் பழங்காலத்திய, வரலாற்றிற்கு முந்திய.
Prehistory
n. வரலாற்றிற்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட செய்திகள்.
Pre-human
a. மனிதன் உண்டான காலத்திற்கு முற்பட்ட.
Pre-ignition
n. முன்னிடுவெடிப்பு, உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு.
Prejudge
v. முன்முடிவு செய், தேராது தீர்ப்புக்கூறு.
Prejudice
n. முற்சாய்வு, முற்கோள், தப்பெண்ணம், கேடு, தீங்கு, பொல்லாங்கு, ஊறு, இழப்பு, எதிர்ச்சார்பு, (வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு, முன்கூட்டி மனங்கெடு, கேடு உண்டுபண்ணு, தீங்கிழை, பொல்லாங்குப்படுத்து, எதிர்ச்சார்பாக்கு.
Prejudicial
a. எதிர்ச்சார்பான, கேடு உண்டுபண்ணத்தக்க, தப்பெண்ணம் ஊட்டுகிற, முற்சாய்வு உண்டுபண்ணுகிற.
Prelacy
n. உயர் திருச்சபைப் பதவி, உயர் திருச்சபைப் பதவியாளர் பணி, உயர் திருச்சபைப் பதவியாளர் ஆட்சி வட்டம், திருச்சபைக் குருமார் ஆட்சிமுறை.
Prelate
n. மேம்படு சமயகுரு, உயர் திருச்சபைப் பதவியாளர், (வர.) திருமடத்தலைவர்.
Prelatess
n. திருமடத்தலைவி, திருமட முதல்வி.
Prelatic, prelatical
a. மேம்படு சமயகுருவுக்கு உரிய, உயர் திருச்சபைப் பதவிக்குரிய.
Prelatize
v. திருச்சபையி சமயகுருமார் ஆட்சிக்குட்படுத்து, மேம்படு சமயகுருவுக்குரியதாக்கு.
Prelature
n. மேம்படு சமயகுருமார் பதவி, உயர்திருச்சபைப் பதவியாளர் தொகுதி.
Prelect
v. விரிவுரையாற்று, பல்கலைக்கழகத்திற் சொற்பொழிவு செய்.
Prelector
n. மேடைப் பேருரையாளர்.
Prelim
n. (பே-வ.) புகுமுகத்தேர்வு.
Preliminaries
n. pl. முன்னேற்பாடுகள், முன்னெழுங்கள்.