English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Preliminary
n. புகுமுகத்தேர்வு, (பெ.) முன்னணியான, பூர்வாங்கமான.
Prelude
-1 n. முற்செயல், முன்விளைவு, பீடிகை, (இசை.) முன்தரவு.
Prelude, prelude
-2 v. புகு முகப்படுத்து, வாயில் செய், முன்குறித்துக்காட்டு, பாயிரத்துடன் தொடங்கு, (இசை.) முன்தரவு இசைப்பி.
Prelusive
a. முன்தரவான, பீடிகையான.
Premature, premature
முற்பட்டு வெடிமருந்து வெடித்தல், (பெ.) முதிராத, பருவமுறாத, உரியகாலத்திற்கு முற்பட்ட, அவசரப்பட்ட.
Prematurity
n. முதிரா நிலை.
Pre-maxillary
a. (உள்.) மேல்தாடைக்கு முன்னுள்ள.
Premeditate
v. முன்பே ஆழ்ந்தாராய், முன் எண்ணு.
Premeditated
a. முன்கருதலுடன் திட்டமிடப்பட்ட, திட்டமிட்டுச் செய்யப்பட்ட.
Premeditation
n. முன்னாராயச்சி, முன்சிந்தனை.
Premier
n. முதலமைச்சர், (பெ.) முதன்மையான.
Premiere
n. நாடக முதலாட்டம், திரைப்பட முதல் வௌதயீடு (வினை.) நாடக முதலாட்டங்காட்டு, திரைப்பட முதல் வௌயீடு செய்.
Pre-millenarian
n. திருமுன்னாயிரத்தார், திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர், (பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய.
Pre-millennial
a. திருவாயிரத்திற்கு முற்பட்ட.
Pre-millennialism
n. திருமுன்னாயிரக்கொள்கை, திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை.
Premise
-2 v. முப்ப்புரையாக எழுது, முன்னுரையாகக் கூறு.
Premise
-1 n. (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம்.
Premises
n. pl. (சட்.) முன்கூறப்பட்டவை, முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள், (சட்.) வரைப்பிடம், சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை, வளவு.
Premium
n. பரிசில், ஊக்கப்பரிசு, காப்பீட்டுக் கட்டணம், பரிசூதியம், நல்லெண்ண மிகை ஊதியம், வட்டிமீது மிகைக்கட்டணம், தொழிற்பயிற்சிக்கான மதிப்பளிப்பு, வாசி வட்டம், உயர் செலாவணியாக மாற்றுவதற்குரிய மிகை வட்டம், மிகை மதிப்பு, உயர்மதிப்பு.
Premolar
n. முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல், மனிதர் வகையில் இருகதுப்புப்பல்.