English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prepare
v. முன்னேற்பாடு செய், ஆயத்தமாக்கு, தகுதியூட்டு, முன்னீடு செய், முதனிலைத்தகுதி உண்டுபண்ணு, பேச்சு-எழுத்து முதலியவற்றை முன்முயன்று உருவாக்கு, பாடத்தை முற்பயிற்சியால் ஆயத்தஞ் செய், முற்பயிற்சியளித்துத் தகுதி பெறுவி, முன்னொருக்கஞ் செய், மருந்து முதலியன கலந்து உருவாக்கு, (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன்முரணதிர்வூட்டு.
Prepared
a. ஒகிய, ஆயத்தமான, முன்முயற்சியால் தகுதியுற்ற, தகுதி நிலையிலுள்ள, கலந்துருவாக்கப்பட்ட, செயற்கையாக உருவான.
Preparedness
n. தகுநிலை, (படை.) ஆய்த்த நிலை, எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை.
Prepay
v. முன்பணஞ் செலுத்து, முன்பே செலவுகொடு.
Prepense
a. எண்ணித் திட்டமிடப்பட்ட, கருதிச் செய்யப்பட்ட, நோக்காகக் கொள்ளப்பட்ட.
Preponderance
n. விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு.
Preponderant
a. எடைவிஞ்சிய, தொகையில் மிஞ்சிய, கழிமிகையான, பெரும்பான்மையான, அளவேற்றமுடைய, சிறப்பு மேம்பட்ட, விஞ்சிய செல்வாக்குடைய, மேம்பட்ட ஆற்றலுடைய.
Preponderate
v. மேம்படு, மேம்பட்டநிலை எய்தப்பெறு, விஞ்சு, விஞ்சியிரு, எடையில் மிகு, தொகையிற் பெரிதாயிரு, பெரும்பான்மையாகு, பெரிதளவாயிரு, முதன்மைநிலை பெறு, முதன்மைக் கூறாய் அமை, நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ்.
Preposition
n. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு.
Prepositional
a. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த.
Prepositive
a. (இலக்.) சொல்-உருபு ஆகியவற்றின் வகையில் முன்வைப்பதற்குரிய.
Prepositor
n. பள்ளிச் சட்டாம்பிள்ளை.
Prepossess
v. முன் கருத்துக்கொள், சார்பு கருத்துக்கொள்.
Prepossessed
a. முற்சாய்வுடைய, ஒருசார்புடைய, சார்பாகச் சாய்ந்த.
Prepossessing
a. கவர்ச்சியூட்டவல்ல, தன்சார்பில் சாய்வூட்டத்தக்க.
Prepossession
n. முன்சார்புடைமை.
Preposterous
a. இயற்கைக்கு மாறான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, நம்பமுடியாத, சிறிதும் பொருந்தாத, முற்றிலும் ஒவ்வாத.
Prepotence, prepotency
n. ஆற்றல் மேம்பாடு, வீரியமிகுதி.
Prepotent
a. ஆற்றல் மிக்க, ஆற்றலில் விஞ்சிய, (உயி.) பொலிவூட்டுத் திறத்தில் மேம்பட்ட, மரபிற் பண்பூட்டும் திறத்தில் விஞ்சிய.
Pre-prandial
a. உண்டிக்கு முந்திய.