English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pre-preference
n. முந்து முற்சார்பு.
Pre-Raphaelism
n. முற்படு கலையார்வக்கோட்பாடு, இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட பழங்கலையார்வ ஈடுபாட்டுக் குழுவினரின் கலைக்கோட்பாடு.
Pre-Raphaelite
n. பழங்கலையார்வக் கோட்பாட்டுக் குழுவினர், இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட கலைப்பண்பைப் பின்பற்றிய 1ஹீஆம் நுற்றாண்டின் பழங்கலையார்வக் குழுவினர்.
Prerequisite
n. முற்படு தேவை, நிபந்தனை, (பெ.) முன்நிபந்தனையான.
Prerogative
n. மேதகவுரிமை, தனிச்சிறப்புரிமை, முதற்பாக்கு, முதல் வாக்குரிமை, (பெ.) தனி முதலுரிமையுடைய, (வர.) பண்டைய ரோமரிடையே முதல் வாக்குரிமையுடைய.
Presage
-2 v. முன்னறிவி, முன்னறிந்துரை.
Presage (1)
n. தீ நிமித்தம், வருவதன் குறி.
Presbyopia
n. கிட்ட பார்வைக் குறைவு.
Presbyter
n. பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர், குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு, முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர்.
Presbyteral
a. திருச்சபை மூப்பர் சார்ந்த.
Presbyterate
n. சமயமூப்பர் பதவி, சமயமூப்பர் தொகுதி, மூப்பராட்சி முறை.
Presbyterian
n. பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர், சமயமூப்பர், ஆட்சிமுறை ஆதரவாளர், (பெ.) பொது ஆட்சிமுறைச் சமயக்கிளைச் சார்ந்த.
Presbyterianize
v. மூப்பராட்சிமுறை ஆதரவாளராக்கு, திருச்சபைப் பொது ஆட்சிமுறை ஆதரவாளராகு, மூப்பராட்சிமுறை நோக்கிச் சாய்வுறு.
Presbytery
n. கருமனை, திருக்கோயில் உள்மண்டபம், மாவட்டச் சமயகுரு மன்றம், சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை, மூப்பர் ஆட்சிமுறை.
Prescience
n. முன்னுணர்வு, முன்னறிவு.
Prescient
a. முன்னுணர்வுடைய, முன்னறி தன்மையுடைய.
Pre-scientific
a. இக்கால அறிவியல்முறை தோன்றுதற்கு முற்பட்ட.
Prescind
v. துணித்தெறி, பிரித்தெறி, கவனக்குறைத்துக்கொள்.
Prescribe
v. அறுதியிடு, விதிமுறைசெய், ஆணையாக இடு, மருந்து முதலியன வகுத்துக்குறி, குறித்துக்கொடு, வகுத்துறை, வழிவகை கூறு, எல்லை கட்டுறுத்து, நடப்புரிமை வற்புறுத்து, நீள் வழக்காற்றுரிமை கோரு, தவணைகடந்து செல்லாததாகு.