English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Papier mache
n. பெட்டி-தட்டு முதலியன செய்வதற்கான தாள் ஊறல் கூழ்மொத்தை.
Papilionaceous
a. வண்ணத்துப் பூச்சியுருவுடைய.
Papilla
n. காம்பு போன்ற உறுப்புப்பகுதி, (தாவ.) சதைப்பற்றுள்ள சிறு முகிழ்.
Papillary
a. சதைக்காம்பு போன்ற, சினப்புச் செறிந்த.
Papillate
a. சதைக் காம்புகளையுடைய.
Papillose
a. சதைக்காம்புகளையுடைய, சினப்புச்செறிந்த, கரணைகள் நிறைந்த.
Papist
n. போப்பாண்டவர் ஆதிக்கத்தை ஆதரிப்பவர், ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்.
Papoosh, papouche
செருப்பு வகை.
Pappus
n. (தாவ.) துய்ச்சிறை.
Paprika
n. அங்கேரிய நாட்டிலுள்ள சிவப்பு மிளகு வகை.
Paps
n.pl. மலைக் குவடுகள்.
Papula. Papule
n. பரு, கொப்புளம், செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ்.
Papyraceous
a. தாளின் இயல்புவாய்ந்த, தாளைப்போல் மெல்லிய.
Papyrograph
n. பொறித்தகட்டுப் படியெடுப்புக்கருவி, செதுக்குத்தாள் தகட்டினைக்கொண்டு ஆவணங்களுக்குப் படியெடுப்பதற்கான அமைவு.
Papyrography
n. பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை, படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
Papyrologist
n. பண்டைய புல்தாள் வரைவு ஆய்வாளர்.
Papyrology
n. பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை.
Papyrus
n. கோரையின நாணற்புல் வகை, ஓலைநாணல்,கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள், நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி.
Par
-1 n. சமநிலை, படியளவை, சராசரி, பங்கு-பங்குமுதல் ஆகியவற்றின் முகப்புவிலை, குழிப்பந்தாட்ட வகையில் முழுஆட்டத்தில் ஒரு குழிக்கு எடுக்க வேண்டிய வீச்சு அளவு, ஆட்டத்தில் ஒரு தடவைக்கு எடுக்க வேண்டிய அடிகளின் அளவு.
Par
-2 n. (பே-வ.) பத்தி, பிரிவு.