English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Paragraph
n. ஏட்டின் ஒருபத்தி, விடுகூறு, பிரிவு, புதியபத்தி அடையாளக் குறியீடு, புதுக்கருத்துத் தொடக்கக்குறியீடு, பத்திரிகையில் தலையங்கமற்ற தனியான பகுதி, (வினை.) பத்தி எழுது, ஆள் அல்லது பொருளைப்பற்றிய பத்தி எழுது, ஆள் அல்லது பொருளைப்பற்றிப் பத்தி எழுது, பத்தி வரிசையாகப் பிரி.
Paraheliotropic
a. செடிகளில் ஔதக்கதிர்களுக்கு இலைகளின் விளிம்புகாட்டிச் சாய்கிற.
Paraheliotropism
n. ஔதக்கதிர்களுக்கு இணைவாக இலைகளைத் திருப்பும் செடிகளின் இயல்பு.
Parakeet
n. நீண்ட வாலுடைச் சிறு கிளிவகை.
Parakite
n. வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை, விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி.
Paraleipsis, paralipsis
n. கூறாது கூறலணி.
Parallactic
a. விழிக்கோட்ட வழுச்சார்ந்த.
Parallax
n. விழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.
Parallel
n. இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான.
Parallelepiped
n. இணைவகத் திண்மம், இணைவகங்களைப் பக்கங்களாகவுடைய பிழம்புரு.
Parallelism
n. ஒருபோகு நிலை, ஒருவழி இணைவுநிலை, நுட்ப உள்ளுறுப்பொப்புமை, இருசொல் இயைபணி, தொடர் உவமை, இணைவளர்ச்சிப் போக்கு, உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
Parallelogram
n. ஒருபோகு நாற்சிறைபி, இணைவகம், எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம்.
Paralogism
n. தவறான வாதம், பொருந்தர வாதம்.
Paralogy
n. போலி நியாயம்.
Paralyse
v. பக்கவாதத்தால் தாக்கு, முடக்குவாதத்துட்படுத்து, ஆற்றலறச்செய், செயலறச்செய், முடமாக்கு.
Paralysis
n. முடக்குவாதம், பக்கவாதம், ஆற்றலிழந்த நிலைமை.
Paralytic
n. முடக்குவாதம் உடையவர் இயக்க ஆற்றற் கூறிழந்தவர், (பெ.) பக்கவாதப் பிணியால் வருந்துகிற, இயக்க ஆற்றலிழந்த.
Paramagnetic
a. காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க.
Paramatta
n. பட்டு அல்லது பருத்தி இணைத்த நயநேரியல் கம்பளித்துணி வகை.
Parameter
n. (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.