English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Parataxis
n. (இலக்.) இணைப்புச் சொற்கள் அல்லது துணைச் சொற்களின்றித் துணையுறுப்பு வாசகங்களை அடுக்குதல்.
Paratroops
n.pl. வான்குடை மிதவையில் ஏற்றிச் செல்லப்படும் படைவீரர்கள்.
Paratyphoid
n. குடற்காய்ச்சற் போன்ற காய்ச்சல் நோய்.
Paravane
n. ஆழ்தடக் கடற்கண்ணி வாரி, கடலடிக் கண்ணிகளின் தளையறுப்பதற்குரிய நீர்முழ்கிபோன்ற ஆழ்தட இழுவைக்கருவி.
Parboil
v. அரைகுறையாகக் கொதிக்கவை.
Parbuckle
n. பார ஏற்றக்கயிறு, மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு, (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய்.
Parcel
n. சிறு கூறு, பகுதி, சிப்பம், பொட்டலம், உருப்படிக்கட்டு, உருப்படி, வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு, (வினை.) பகுதிகளாகப் பிரி, (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி, இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcel service
சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
Parcelling
n. உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள்.
Parcenary
n. இணைமரபுரிமை.
Parch
v. இலேசாக வறு, வாட்டு, உலர்த்து, வரட்சியூட்டு வாடி உஷ்ர்.
Parchment
n. வரைதோல், எழுதுவதற்காகப் பாடம் செய்யப்பட்ட ஆட்டுத்தோல், படம எழுதுவதற்குரிய தோல், தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு, வரைதோல் போன்ற தொலி உமி.
Parchouli,patchouly
பச்சிலை, மணப்பொருள் தருஞ்செடிவகை, மணப்பொருள் வகை.
Pardon
n. மன்னிப்பு, மன்னிப்பு வழங்கும் பண்டிகை, (சட்.) தண்டனை குறைப்பு, பொறுத்தருள் பண்பு, (வினை.) மன்னித்துவிடு, குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு, தண்டிக்காது விட்டுவிடு.
Pardoner
n. (வர.) திருக்கோயில் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை உரிமையாளர்.
Pare
v. சீவிச்செப்பனிடு, தறித்து ஒழுங்குபடுத்து, பழம்முதலியவற்றின் தோலைச்சீவு, தோடுநீக்கு, நகம் வெட்டு, கொஞ்சங் கொஞ்சமாகக் குறை, ஓரம் நறுக்கு, விளிம்பு வெட்டி எறி.
Paregoric
n. சூட அபினித்தைலம், சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து, (பெ.) நோவாற்றுகிற, வேதனைதணிக்கிற.
Pareira
n. சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டு வேர்சரக்கு மருந்து வகை.
Parenchyma
n. (உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு.