English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Profit-sharing
n. இலாபப்பங்கு ஒப்பந்தம்.
Profligacy
n. ஒழுக்கக்கேடு, வரம்புமீறிய ஊதாரித்தனமாக.
Profligate
n. ஒழுக்கக் கேடர், ஊதாரி, (பெ.) தீயொழுக்கமுடைய, ஊதாரித்தனமான.
Profound
n. (செய்.) தடங்காணா ஆழம், கடலின் ஆழ்கசம், உள்ளத்தின் வகையில் ஆழ் தடம், காலவகையில் நீள் தொலைப்பகுதி, வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி, (பெ.) மிக ஆழ்ந்த, ஆழமிக்க, தடங்காணாத, நெடுந்தொலை உட்கடந்த, உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த, உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற, முழு ஆற்றல்வாய்ந்த, வீறார்ந்த, அறிவுவகையில் அளவிடற்கரிய, புலமைவகையில் அறிவாழமிக்க, எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய, வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த, உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த, அழியாத் தடம்பதித்த, நெடுந்தொலை பரந்து செல்கிற.
Profuse
a. தாராளமான, மட்டுமீறிய, தேவைக்கு மேற்பட்ட, தங்குதடையற்ற, அள்ளி வழங்குகிற.
Profusely
adv. அளவின்றி, தங்குதடையின்றி, ஏராளமாக.
Profusion
n. தாராளம், ஊதாரித்தன்மை, தங்குதடையற்ற வளம்.
Prog(3), progghis
n. ஓழுங்குகாவலர், ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்குமுறை நிலைநாட்டும் அதிகாரி, (வினை.) கல்கலைக்கழக ஒழுங்கு காவலராகச் செயலாற்று.
Progenitive
a. கால்வழி பெருக்கத்தக்க, சந்ததி உண்டு பண்ணத்தக்க, மரபுப்பெருக்கஞ் சார்ந்த.
Progenitor
n. மூதாதை, முன்னோர், விலங்கு-தாவரங்களின் மரபுமூலமுதல், தந்தை, பண்புமரபில் முன்னோடி, முந்திய மூலமாதிரி.
Progeniture
n. கால்வழிப்பெருக்கம், சந்ததி ஆக்கம், ஈனுதல், கால்வழி, சந்ததி.
Progeny
n. கால்வழிமரபு, சந்ததி, வழித்தோன்றியவை, மக்கள்,விலங்கு-தாவரம் முதலியவற்றின் மரபுத் தோன்றல்கள், பின்விளைவுத்தொகுதி, தொடர்விளைவான பயன்.
Proglottis
n. நாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி.
Prognathous
a. தாடை நீண்ட.
Prognosis
n. முன்கணிப்பு, வருவது முன்னறிவிப்பு, (மரு.) வருவதுரைத்தல்.
Prognostic
n. வருங்குறி, வருவது பற்றியமுன்குறிப்புரை, உன்னம், நிமித்தம், முன்குறி, முன்னடையாளம், முன்னறிவுக்க உதவுங்கூறு, (பெ.) முன்னறிகுறியான, வருவது முன்கூறுகிற, குறிகாட்டுகிற, முன்னறிவிப்பின் இயல்புடைய.
Prognosticate
v. முன்னறிந்து கூறு, வருவதுரை, முன்குறிகாட்டு, முன்னறிகுறியாய் அமை.