English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pro-leg
n. பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால்.
Prolegomenon
n. பாயிரம், பீடிகை.
Prolepsis
n. வருவது முன்குறிந்த நிலை, (இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு.
Proletaire
n. ஊழிய வகுப்பினர், சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர், (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த.
Proletarianism
n. கடைவகுப்பு மக்கள் நிலை.
Proletariat, proletariate
n. சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு, பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு, பட்டாளி மக்கள் தொகுதி.
Proletary
a. சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.
Prolicide
n. பிள்ளைக்கொலை, சிசுக்கொலை.
Proliferate
v. உயிர்மம் பெருக்கு, விரைந்து பெருக்கு.
Proliferation
n. உயிர்மப் பெருக்க வளர்ச்சி, இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல், புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல், குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி, பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல், பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு.
Proliferous
a. (தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற, பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற, மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற, (வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற, (மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற.
Prolific
a. கால்வழிப் பெருக்கமுள்ள, இனப்பெருக்க வனமிக்க, ஏராளமான, விளைவு வளமிக்க.
Proligerous
a. குழந்தை பெறுகிற, ஈனுகிற, பிறப்புச் சார்ந்த.
Prolix
a. மிகு சொற்புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள, நெடுநீளமான.
Prolixity
n. நீட்சி, சொல்மிகை.
Prolocutor
n. இங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர்.
Prologize
v. பாயிரம் எழுது, முன்னுரையாகக் கூறு.
Prologue
n. முகப்புறுப்பு, பாயிரம், அறிமுகப்பகுதி, பீடிகை, அறிமுகம் செய்யப்பயன்படுகிற செயல், முன் குறிப்பு நிகழ்ச்சி, (வினை.) முகவுரை கூறி அறிமுகப்படுத்து, முகவுரை எழுதிச் சேர்.
Prolong
v. நீட்டு, அளபெடுக்கச்செய், அசை ஒலிப்பினை நீடிக்கவை, காலங்கடத்து, நீடி, அளபெடு, கால நீட்டிப்புறு, தொடர்ந்து நீள்வுறு.
Prolongation
n. நீட்டம், நீட்டிப்பு, தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று, நீட்டிய பகுதி, தொடர்ச்சி.