English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prolusion
n. வௌளோட்டம், முன் கட்டுரை.
Prom
n. (பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு, கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
Promenade
n. உலா, உலாவுமேடை, பவணிவீதி, (வினை.) உலாவு பவனி வா.
Promerops
n. தென்னாப்பிரிக்க பறவையினம்.
Promethean
n. தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை, (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற, புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
Prominenece, prominency
n. மேம்பாடு, மேற்புடைப்பு, உயர்ச்சி, மேடு, முகடு, முனைத்த முக்கியத்துவம், முதன்மைநிலை, தலைமைநிலை.
Prominent
a. காண்புக்கடுத்த, மேற்புடைப்பான, எடுப்பான தோற்றமுடைய, விஞ்சிய, முனைத்த, மேடிட்ட, முகடான, முதன்மை வாய்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்புமிக்க.
Promiscuity
n. கந்தறுகோலம், கண்டிபடிக் கலப்பு.
Promiscusous
a. ஒழுங்கின்றிக் கலந்துள்ள, கந்தல் கூளக்கலவையான, தாறுமாறான, வரைமுறையற்ற தராதரமற்ற, (பே-வ) தற்செயல் நிகழ்வான.
Promiscusous-like
adv. தற்செயலாக, குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி.
Promise
n. உறுதிமொழி, வாக்குறுதி, வாக்களித்த செய்தி, வாக்களிக்கப்பட்ட பொருள், நல்வாய்ப்புவளம், எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி, (வினை.) உறுதிதமொழிகூறு, வாக்களி, வாய்ப்புவள நம்பிக்கையூட்டு, எதிர்பார்க்கத்தக்கதாயிரு.
Promisee
n. (சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர், வாக்குக் கொடுக்கப் பெற்றவர்.
Promising
a. நல்ல எதிர்காலமுடைய, முன்னுக்கு வரக்கூடிய, பின்வரு வாய்ப்புவள நம்பிக்கையூட்டுகிற.
Promissory
a. உறுதிமொழியடங்கிய,.
Promontory
n. நிலக்கூம்பு, கடலிற் பாய்ந்துள்ள நில முனைக்கோடி, (உள்.) உந்துறுப்பு, உடலில் புறமுனைப்புடைய நீள் பகுதி.
Promote
v. உயர்த்து, மேம்படுத்து, முன்னேறுவி, வளர்ச்சி ஊக்கமளி, ஆதரித்து உயர்வுகொடு, மேல்தரப்படுத்து, மேல்வகுப்புக்கு உயர்த்து, சட்டம் முதலியவை வகையில் ஆதரவுதந்து நிறைவேற உதவு, சதுரங்கக்காய் வகையில் காலாட் காயை அரசிக் காயாக உயர்த்து.
Promoter
n. ஆதரவளிப்பவர், முன்னேறச் செய்பவர், உயர்வு ஊக்குபவர், வணிகநிறுவனங்களின் அமைவுக்கான ஆக்க முயற்சிகள் செய்பவர்.
Promoters
மேம்படுத்துநர், வளர்க்குநர்
Promotion
n. உயர்த்துதல், முன்னேற்றம், பதவி ஆதரித்தல், முன்னனேற்றம், உயர்வு, பதவியுயர்வு, தேறுதல், மேல்வகுப்புக்குரிய உயர்வு, தொழில் முன்னேற்றத்துக்கான ஆக்கமுயற்சி.
Prompt
n. பத்திரத்தவணை எல்லை, நினைப்பூட்டுதல், தூண்டுதற் குறிப்பு, நினைவு தூண்டுஞ்சொல், (பெ.) வரிந்தொருங்கிய, எப்போதும் செயலாயத்தமான, காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற, விரைசுருக்காகச் செய்யப்பட்ட, உடனடியான, வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான, (வினை.) தூண்டு, இயக்கு, நினைவுபடுத்து, நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு, எடுத்துக்கொடு, உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய், (வினையடை.) தாமதமின்றி, காலந்தாழ்த்தாமல், உடனுக்குடன்.