English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pronounced
a. வன் திறமான, முனைப்புடைய, தனிப்பண்பினைக் காட்டுகிற, தீர்மானமான.
Pronouncement
n. அதிகார அறிவிப்பு.
Pronouncing
n. முறையாகக் கூறுதல், கருத்து அறிவித்தல், ஒலித்தல், உச்சரித்தல், (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற, ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
Prontosil
n. கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
Pronunciamento
n. ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு.
Pronunciation
n. நவில்முறை, உச்சரிப்பு, ஒலிப்பு, சொற்களை உச்சரிக்கும் தனிப்பட்டட பாங்கு.
Proof
n. கரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌதவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Proofless
a. சான்று இல்லாத.
Proof-plane
n. காப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின் கடத்தி பொருத்திப் பொருளின் மின் ஊட்டம் அளக்குங்கருவி.
Proof-reader
n. அச்சுப் பார்வைப்படி திருத்துபவர்.
Proof-reading
n. சரவையிடுதல், அச்சுப் பார்வைப்படி திருத்துதல்.
Proof-sheet
n. அச்சுப் பார்வைத்தாள்.
Prop
-1 n. உதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
Prop
-2 n. (பே-வ., சு-வ) விமானச் சுழல் விசிறி.
Prop
-3 n. (சு-வ) நாடக வழக்கில் மேடையுடைமை.
Propaedeutic
n. கலைமுன் கலை, கலைமுன் அறிபொருள்.
Propaedeutics
n. pl. முன்னணி அறிவு.
Propaganda
n. பரப்புரை, கருத்துப் பரப்பு, பிரசாரம், பரப்பப்படுஞ் செய்தி, கோட்பாட்டுப் பரப்புதல் அமைப்பு.
Propagandist
n. கொள்கைப் பரப்பீட்டாளர், பரப்புக்குழு உறுப்பினர், மதமாற்றத் தொண்டு ஊழியர், ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர், உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள், பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
Propagate
v. இனம் பெருக்கு, இனப்பெருக்கமுறு, தன்னினந் தழைப்பி, மரபு தொடர்வி, பண்புமரபு தொடர்வி, பண்பு நீடித்ததுத் தழைக்கச் செய், வௌதப்பரப்பு.