English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Propitiatory
n. இரக்கத்தின் இருக்கை, யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு, அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி, (பெ.) மனக்குறையாற்றுகிற, சினமாற்றுகிற, அமைதிப்படுத்துகிற, பழிமாற்றீடு செய்கிற.
Propitious
a. செவ்வியார்ந்த, நல்லிணக்கம் வாய்ந்த, சார்பு நலமுடைய, நன்னிமித்தமான, நல்லிசைவான.
Prop-jet engie
n. நீர் அல்லது நீராவியால் சுழலும் பொறி உருளையுடைய விமான இயந்திரம்.
Propoils
n. தேம்பிசின், புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள்.
Propone
v. முன் தள்ளிவை, முன்மொழி.
Proponent
n. சார்பாளர், மன்ற நடவடிக்கைகளில் முன் மொழிபவர், புதுக்கருத்துரைப்பவர்.
Proportion
n. கதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து.
Proportional
n. தகவுப்பொருத்தத்தின் எண்கூறு, (பெ.) சரிசம விழுக்காடுடைய, சரிசமவீத அளவான, அளவொத்த.
Proportionalist
n. ஒப்பளவாளர், படிவீதத் திட்டம் அமைப்பவர், சரிவிழுக்காட்டுப் பேராண்மை ஆதரவாளர்.
Proportions
n. pl. நீள-அகல-உயரங்கள், அளவு, பருமன்.
Proposal
n. எடுத்துரை, முன்மொழிதல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை.
Propose
v. எடுத்துமொழி, முன்மொழி, உளங்கொள்,குறிக்கொள், திட்டமுன்கொணர், வேட்பாளராகக் குறிப்பிடு, பெயர் குறிப்பிட்டு முன்மொழி, மணங்கோரு, புதிதாக எண்ணு, தகுதி நோக்கு.
Proposition
n. ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம்.
Propound,v.
முன் எடுத்துரை, கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை, விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா.
Propraetor
n. (வர.) பண்டைய ரோமாபுரியில் படைத்துறையின் ஆணையின் கீழல்லாத துணை மாநில ஆளுநர்.
Proprietary
n. உடைமை உரிமையாண்மை, உரிமையாளர்நிலை, உரிமையாளர் குழு, (பெ.) உடைமை உரிமையுடைய, உடைமை உரிமை சார்ந்த, தனிப்பட்டவர் உரிமையுள்இருக்கிற.
Proprieties
n.pl. ஒழுங்குமுறைகள், நன்னடத்தைப்பாங்குகள், இலக்கிய நடைமுறை வரம்புகள், இலக்கண விதிமுறை மரபுகள்.
Proprietor
n. உரிமையாளர்.
Propriety
n. தகுதி, நேர்மை, ஒழுக்கமுடைமை, ஒழுங்குமுறைமை, தகவு, பொருத்தம், நடைமுறைவரம்பு, மொழித்துறை, மரபுவழிப்பண்பு, சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு.
Proprio motu
n. போப்பாண்டவரின் முறைமன்ற ஆட்சிக்குரிய முத்திரையற்ற போப்பாண்டவரின் திருக்கட்டளை.