English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prognostication
n. வருவதுரைத்தல், நிமித்தம்.
Program, programme
நிகழ்ச்சிநிரல், செயல்முறைவகுப்பு, அமைப்புத்திட்டம், (வினை.) நிரல்பட வகு, செயல்திட்டம் வரை.
Progress
-1 n. முன்னேற்றம், முற்போக்கு வளர்ச்சி, தொடர்ச்சி, மேம்பாடு.
Progress
-2 v. முன்னேறு, மேம்பாடு அடை, வளர்ச்சியடை, தொடர்ந்து நடைபெறு.
Progression
n. முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.
Progressionist, progresist
n. முன்னேற்றவாதி, அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர், நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர், உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
Progressive
n. முற்போக்காளர், அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர், (பெ.) முன்னேறுகிற, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற, படிப்படியான, சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற, நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற, சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
Prohibit
v. தடை செய், செயலைத்தடு, தடுத்தாணையிடு.
Prohibition
n. தடைசெய்தல், செயலைத்தடுத்தல், தடையுத்தரவு, மதுவிலக்கு, (சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு.
Prohibitive
a. தடுக்கிற, தடைசெய்கிற.
Prohibitory
a. விலக்குகிற, தடுக்கிற.
Project
-1 n. திட்டம், செயல்முறை ஏற்பாடு.
Project
-2 v. துருத்திக்கொண்டிரு, முனைநீட்டிக்கொண்டிரு, எல்லைகடந்து உந்தியிரு, உந்துவி, நீட்டு, வௌதப்படவிடு, புறஞ்செலுத்து, பின்னணித்தளமீது உருவரை காணப்பெறு, பின்னணிக்கெதிராக உருவரை படியவை, எறிவுசெய், ஔதநிழல் உருவரைகளை அகல்வௌதயில் வீசு, மேற்படிவுசெய், ஔத நிழல் வட
Projectile
n. ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
Projection
n. எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஔதநிழல் எறிவுரு.
Projective
a. கருத்துக்குப் புறவுருக்கொடுக்கிற, எறியப்பட்ட, எறிவுப்படிவ இயல்புடைய, எறிவினால் படிவிக்கப்பட்ட, எறிவினால் பண்புமாறாத, உந்துமுகப்புடைய.
Projector
n. திட்ட இயக்குநர், ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர், ஔத எறிவுக் கருவி அமைவு, திரைப்பட ஔதயுருப்படிவுக்கருவி, எறிவுப்படிவக்கோடு.
Prolap,sus
(மரு.) உறுப்புப்பெயர்வு, கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல்.
Prolapse
n. (மரு.) கருப்பை நெகிழ்ச்சி, (மரு.) மலக்குடல் இடப்பெயர்வு, (வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு.
Prolate
a. (வடி.) கோளவுரு வகையில் துருவ அச்சு நீட்டிப்பு உடைய, அகலத்தில் மிகை வளர்ச்சியுடைய, மிகுபரவலாயுள்ள, (இலக்.) பயனிலைப்பொருளை முடிப்பதற்குப் பயன்படுகிற, பயனிலைமானம் விரிக்கிற.