English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prostrate
-1 a. குப்புறப்படுத்த நிலையில் உள்ள, நெடுஞ்சாண்கிடையான, விழுந்து வணங்குகிற, சரணடைந்த, பணிந்த, முழுதும் தோல்வியுற்ற, வலுவிழந்த, முற்றிலுஞ் சோர்வுற்ற, (தாவ.) நிலம்படிந்து கிடக்கிற.
Prostrate
-2 v. நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்து, வீழ்த்து, முறியடி, முழுதும் கீழடக்கு, பணியச்செய், முற்றிலும் வலுவிழக்கச்செய்.
Prostyle
n. நாற்றுண் முகப்பு மண்டபம், கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம், (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய.
Prosy
a. சலிப்புத்தட்டுகிற, சிறப்பற்ற, எழுச்சியுற்ற, சாரமற்ற.
Protagonist
n. முக்கிய நடிகர், கதையின் முக்கிய உறுப்பினர், வாகையர், கோட்பாட்டுப் பரிவுரைஞர்.
Protasis
n. பீடிகை வாசகம், ஏஞூற்று வாசகம்.
Protean
a. அடிக்கடி மாறுகிற, பல வடிவம் ஏற்கிற, நிலையற்ற.
Protect
v. காப்பாற்று, கெடாது தடு, இடரினின்று தடுத்தாளு, பாதுகாப்பு அளி, நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய், போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி, தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய், இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
Protect document
ஆவணப்பாதுகாப்பு
Protection
n. பாதுகாப்பு, ஆதரவு, ஆதரவளிப்பது, ஆதரவாளர், பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு, காப்புறுதிச் சீட்டு, கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ், உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை.
Protective
a. பாதுகாக்கிற, பாதுகாப்பிற்கு உகந்த, பாதுகாப்பு நோக்கங்கொண்ட, உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
Protector
n. காப்பாளர், ஆதரவாளர், ஆட்சிக்காவலர், ஆட்சிப் பேராளர், காப்புக்கருவி, காப்புத் துணைப்பொருள்.
Protectorate
n. ஆட்சிக்காவலர் பணிநிலை, ஆட்சிக்காவற்காலம், இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல்-ரிச்சர்டு கிராம்வெல் (1653-165ஹீ) ஆகியோரின் ஆட்சிக்காலம், காப்பாட்சி, பிற்பட்ட பகுதியின் பொறுப்பை ஏற்று முற்பட்ட அரசு நடத்தும் ஏவலாட்சிமுறை.
Protectory, n;
காப்பாண்மை நிலையம், துணையற்றவர்களுக்கும் பொல்லாத குழந்தைகளுக்கும் ஆதரவளிக்கும் ரோமன் கத்தோலிக்க நிறுவனம்.
Protege
n. காப்புட்படுநர், பிறர் பாதுகாவலில் வைக்கப்படுவோர், இன மாணாக்கர்.
Proteiform
a. மிகவும் உருமாறதக்க.
Protein
n. (வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
Proterandrous
a. (தாவ.) சூலகத்திற்கு முன்னரே பூந்துகள் முதிர்ச்சி எய்துகிற.
Proterogynous, a.
(தாவ.) பூந்துகளுக்கு முன்பே சூலகம் முதிர்வுகிற.
Protest
-1 n. மறுப்புரை, கண்டனம், கண்டன அறவிப்பு, சிறுபான்மை எதிர்ப்பாளரின் கண்டனப்பதிவு, காசுமுறிமுறைப்பட மறுக்கப்பட்டதென்ற பத்திரப் பதிவாளரின் எழுத்தறிவிப்பு, மனமார்ந்த உறுதி அறிவிப்பு.