English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Partly
adv. ஒரு பகுதியைக் குறித்தமட்டில், அரைகுறையாக, பகுதியளவாக, ஓரளவாக, சிறிதளவாக.
Partner
n. கூட்டாளி, பங்காளி, துணைவர், மனைவி, கணவன், ஆடற்கூட்டாளி, வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி, கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று, (வினை.) இணை, கூட்டு, கூட்டாளியாயிரு.
Partners
n.pl. (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு.
Partnership
n. கூட்டுப்பாங்காண்மை, கூட்டில் பங்காளியாயிருக்கிற நிலை, பங்காண்மைக் கூட்டுவாணிகம், ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடைப்பட்ட ஒப்பந்தம்.
Part-owner
n. கூட்டுச் சொந்தக்காரர்.
Partridge-wood
n. தச்சுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கடினமான சிவப்புக்கட்டை வகை, சில காளான் வகைகளால் சட்டைகளின் மேல் தோன்றும் புள்ளிகள்.
Parts
n.pl. இடங்கள், நிலப்பகுதிகள், திறமை, அறிவுத்திறம், விலங்குடம்பின் பகுதிகள்.
Part-song
n. ஒத்திசைப்பாட்டு.
Part-time
a. குறை நேரத்துக்குரிய, முழுநேரமல்லாத.
Part-timer
n. பகுதிநேரப் பணியாள்.
Parturient
a. ஈனுகிற, ஈனுந்தறுவாயிலுள்ள, கருவுயிர்ப்புச் சார்ந்த, கருத்துப் படைப்புச் சார்ந்த, புத்துருவாக்கும் நிலையிலுள்ள.
Parturition
n. பிள்ளைப்பேறு, பிறப்பு, புதுத்தோற்றம்.
Parturiunt montes, nascetur ridiculus mus.
மலைகள் கருவுயிர்த்து எலியைப் பெற்றன, மிகப் பெருமுயற்சி அற்பப் பயன்.
Party
n. கட்சி, கூட்டத்தார், சேகரத்தார், நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர், பயணக்குழு, ஒரு தொழிலர் குழு, விருந்தினர் கூட்டம், வழக்கில் ஒருதிறத்தளவர், ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர், மணவினையில் ஒருதரப்பினர், மணமகன், மணமகள், உடந்தையாளர், ஒத்து உதவுபவர், ஆள், (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட, சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Parvenu
n. பெருவாழ்வு அற்பர், யாணரார்.
Parvis
n. வளைமுற்றம், திருக்கோயில் முதலியவற்றின் எதிரிலுள்ள அடைப்பிட்ட நிலப்பரப்பு.
Pas
n. முந்துரிமை, முந்துநிலை, ஆடல் அடிபெயர்ப்புமுறை.
Pas de deux
n. ஒருவர் அல்லது இருவர்க்கான நடனவகை.