English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Passer-by
n. வழிச்சொல்வோர்.
Passerine
n. கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை, (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த, சிட்டுக்குருவியின் அளவுள்ள.
Passible
a. (இறை.) உணர்ச்சியுடைய, துன்பமுணரக்கூடிய.
Passim
adv. ஏட்டுரை மேற்கொள் சுட்டுவகையில் எல்லா இடங்களிலும், முழுவதிலும், பரவலாக.
Passimeter
n. பயணச்சீட்டுத் தானியங்கி.
Passimist
n. நம்பிக்கையற்றவர், தோல்வி மனப்பான்மையர், எதிலுந் தீயதையே காண்பவர், துன்ப இயற்கைக் கோட்பாட்டாளர்.
Passing
n. கடந்துசெல்லுதல், தேர்வில் தேறுதல், கடந்து செல்வித்தல், தேறுவித்தல், கடந்துசெல்லுமிடம், முடிவுறுதல், இறப்பு, பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வௌளி இழை, (பெ.) அருகே செல்கிற, ஊடே செல்கிற, விட்டுச்செல்கிற, நிலையற்ற, விரைந்தோடுகிற, நன்குஆராயாத, தற்செயலான, (வினையடை.) கடந்துசென்றுகொண்டு, நிலையற்று, விரைந்தோடி, நன்குஆராயாமல், தற்செயலாக.
Passion
n. உவ்ர்ச்சி, அடங்காக் கோபம், அடங்காப் பாலிணை விழைவு, மிகு காமம், வெறி உணர்ச்சி, பேரார்வம், (வினை.) (செய்.) உணர்ச்சி கொள், பேரார்வங்காட்டு.
Passional
-1 n. திருத்தொண்டர்கள் தியாகிகள் இவர்களுடைய துன்பங்களைக் கூறுஞ் சுவடி.
Passional
-2 a. உணர்ச்சி சார்ந்த, பேரார்வங் காட்டுகிற.
Passionate
a. எளிதிற் சினங்கொள்ளத்தக்க, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற, முற்றார்வத்தின் விளைவான, மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
Passion-flower
n. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
Passionist
n. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளின் நினைவை நிலைநிறுத்துவதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்யப் பிணைபட்டுள்ள குழுவினருள் ஒருவர்.
Passionless
a. சமநிலையான, எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.
Passion-play
n. இயேசுநாதரது துன்பங்களையும் இறப்பினையுங் காட்டும் சமயநாடகம்.
Passisng-note
n. (இசை.) பண்ணமைதிக்கு இன்றியமையாததாய் இராது தடங்கலற்ற சுரபேதத்திற்குத் துணை செய்யும் இசைக்கூறு.
Passive
n. (இலக்.) வினையின் செயப்பாட்டு வடிவம், செயப்பாட்டு வினை, சாத்துவிக குணத்தினர், (பெ.) துன்ப மேற்கிற, தன் செயலின்றிப் பிறர் செயலுக்காட்பட்ட, (இலக்.) செயப்பாட்டுவினை சார்ந்த, எதிர்க்காத, அடங்கிப்போகிற, சுறுசுறுப்பில்லாத, மந்தமான, உயிர்ப்பற்ற.
Passkey
n. வாயிற்கதவு முதலியவைகளுக்கான தனிமுறைத்திறவுகோல், பலபூட்டுச் சாவி.
Passman
n. பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புநிலைப் பட்டம் பெறாமல் பொதுநிலைப்பட்டம் பெற்றவர்.