English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Parse
v. சொல்லிலக்கணங் கூறு, வாக்கியத்தைக் கூறுகளாகப் பாகுபடுத்தி அவற்றிற்கு விவரங்கூறு.
Parsec
n. வான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு.
Parsee
n. பார்சி, பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர், முற்காலப் பாரசீக மொழி, பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி.
Parseeism
n. இந்தியா வந்துசேர்ந்த பாரசீகர்களின் சமயம்.
Parsimonious
a. மட்டுமீறிச் சிக்கனமான, உலோப குணமுள்ள, ஈயாத.
Parsimony
n. செட்டு, சிக்கனம், உலோபம்.
Parsley
n. சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வௌளை மலர்களையுமுடைய செடிவகை
Parsnip
n. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு, சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
Parson
n. ஊர்ச் சமயகுரு, திருச்சபைப் பணியாளர்.
Parsonage
n. சமயகுரு இல்லம்.
Parson-bird
n. கருஞ்சிறகும் வௌளைக் கழுத்துமுடைய நியூசிலந்து பறவை.
Part
n. கூறு, பகுதி, புத்தகப் பிரிவு, காண்டம், பாகம், சம்புடம், முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று, ஒதுக்கப்பட்ட பாகம், பங்கீடு, செயலில் ஒருவரது பங்கு, கடமை, அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி, அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள், அரங்கில் நடிகர் பக்கம், (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண், (வினை.) கூறுகளாகப் பிரி, தொடர்கிளைகளாகப் பிரி, வகிரெடு, சண்டை செய்பவர்களை விலக்கிவை, நண்பர்களைப் பிரித்து வை, வேறுபடுத்து, கூட்டுறவை விட்டொழி, (பே-வ.) பணங்கொடு, (வினையடை.) பகுதியாக, சிறிதுமட்டில், பாகத்தைப் பற்றிய மட்டில்.
Partake
v. பங்குகொள், கூட்டிலிணைந்து பங்கெடுத்துக் கொள், சிறிது அருந்து, இயல்பு முதலியவற்றிற் பங்குகொள்.
Parte
n. பிதற்றுரை, வீண்பேச்சு, பயனில்சொல், (வினை.) பிதற்று, உளறு.
Parterre
n. பூம்படுக்கை, தோட்டத்திற் பூம்பாத்திகள் அமைந்த சமதளப்பகுதி, இசையரங்கு மண்டபத்திற் கூடுகொள் இன்னியத்துக்குப் பின்னுள்ள பாகம்.
Parthenogenesis
n. (உயி.) பாலினக் கூட்டற்ற இனப்பெருக்கம்.
Parthian
a. பண்டைய மேற்கு ஆசிய அரசாகிய பார்த்தியா சார்ந்த.
Parti
n. திருமணத்துக்குத் தகுந்தவரெனக் கருதப்படுபவர்.
Parti pris
n. மனக்கோட்டம், முன்னரே கொண்ட கருத்து.
Partial
n. (இசை.) முழுமையாக ஒலிக்காத கிளைச்சுரம், (பெ.) ஒருசார்புடைய, மனக்கோட்டமுடைய, நேர்மையற்ற, அரைகுறையான, நிறைவற்ற, முழுமையாயிராத, பகுதியளவான.