English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Parnellite
n. பார்னல் என்பவரின் அயர்லாந்து நாட்டுத்தன்னாட்சிக் கொள்கையினைப் பின்பற்றுபவர்.
Parochial
a. திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த, குறுகிய பகுதி சார்ந்த, குறுகிய நோக்கங்கொண்ட, குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய, குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய.
Parochialism
n. திருச்சபை வட்டார அடிப்படையான திணையாட்சி முறை, குறுகிய நோக்கம், குறுகிய கோட்பாடு.
Parochialize
v. குறுகிய நோக்கமுடையதாக்கு, வட்டாரங்களாக வகுத்தமை, திருச்சபை வட்டாரப் பணிச்செய்.
Parody
n. நையாண்டிப் போலி, எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது, வலுவில் போலி, பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி, (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு, நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு, கேலிககுரியதாக்கிக் காட்டு.
Parole
n. நன்னம்பிக்கை உறுதிமொழி, (படை.) வாய்மொழி உறுதி, போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி, (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல், (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Paronomasia
n. செம்மொழிச்சிலேடை.
Paronychia
n. விரற்சுற்றி.
Parotid
n. காதின் முன்புறத்திலுள்ள சுரப்பி, (பெ.) காதருகில் அமைக்கப்பட்ட.
Parotitis
n. பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை.
Paroxysm
n. இசிப்பு, வலிப்பு.
Paroxytone
n. (இலக்.) கிரேக்க மொழியில் ஈற்றயல் அசைகூர் ஒலியழுத்தங்கொண்ட சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழியின் சொல்வகையில் ஈற்றயல் அசை கூர் ஒலியழுத்தங்கொண்ட.
Parpen
n. சுவரில் இருதலை நெடுங்கல்.
Parquet
n. மரக்கட்டை எழில்விரிப்பு, (வினை.) மரக்கட்டை எழிற்பரப்பு அமை.
Parr
n. சிறு சால்மன் மீன், சால்மன் மீன் குஞ்சு.
Parricidal
a. தந்தைக்கொலை சார்ந்த, தந்தைக்கொலைபான்ற, உறவுக்கொலைக்குரிய, நாட்டுப் பகைமைப்பழி சார்ந்த.
Parricide
n. தந்தையைக் கொன்றவர், நெருங்கிய உறவினரைக் கொன்றவர், மதிப்பிற்குரியவரைக் கொன்றவர், நாட்டுப் பகைஞர், தந்தைக்கொலை, உறவுக்கொலை, சான்றோர்க் கொலை, நாட்டுப் பகையாண்மை.
Parrot
n. கிளி, (வினை.) கிளிபோல் சொன்னதைச் சொல், கிளிபோல் சொன்னதைச் சொல்ல ஆளைப்பழக்கு, கிளிபோலப்பேசு.
Parrot-fish
n. கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுமுடைய மீன்வகை.
Parry
n. தவிர்த்தல், தடுத்தகற்றுதல், (வினை.) தவிர், தடுத்தகற்று.