English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Perusal
n. தேர்ந்தாய்வு நுண்ணாய்வு, படித்தல், பார்வையிடல்.
Peruse
v. கவனமாகப் படி, நுண்ணாய்வு செய்.
Peruvian
n. தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டினர், (பெ.) பெரு நாடு சார்ந்த.
Pervade
v. ஊடுருவிப்பரவு, பரந்து தோய்வுறு, ஊடுருமவி நிரப்பு, கரைந்து தெவிட்டுநிலை எய்துவி.
Pervasive
a. படர்ந்து பரவுகிற, ஊடுபரவும் பாங்குள்ள, ஊடுருவி நிரம்பும் ஆற்றலுடைய.
Perverse
a. விடாது பிழை செய்கிற, வேண்டுமென்றே தவறுசெய்கிற, விபரீதமான, தேவைக்கு முரணாண, கட்டுமீறிய, முறைதிறம்பிய, சொற்கேளாத, சிடுசிடுப்பான, குணக்கேடுடைய, நெறிகோணிய, தவறான போக்குடைய, கொடிய, ஏறுமாறான, தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட, நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.
Perversion
n. நெறிபிறழ்வு, பிறழ்வுநிலை, நடைமுரண்பாட்டு விளைவு, உருத்திரிபு, ஏறுமாறான போக்கு, இயல்முரணிய பாலுணர்ச்சி, (கண.) கண்ணாடியில் நிழற்படிவம் உண்டாதல், கண்ணாடி நிழற்படிவம்.
Perversity
n. முறைகேடு, முரணியல், வக்கரிப்பு, விபரீதப்பண்பு.
Perversive
a. தகாவழிச் செல்கிற, முரண்பாடான, தலைகீழாய் புரட்டுகிற.
Pervert
-1 n. இயல்முரணிய பாலுணர்ச்சியுள்ளவர், கோணல் போக்குடையவர், கொள்ளை மாறாட்டக்காரர், அறிவைத்தவறாகப் பயன்படுத்துபவர்.
Pervert
-2 v. தகாவழிப் பயன்படுத்து, இயல்மீறிய பொருள்கொள், சொற்களைத் தவறாக வழங்கு, சமயக்கோட்பாட்டு வகையில் உண்மை நெறியினின்றும் விலக்கி அழைத்துச் செல்.
Pervious
a. ஊடுருவிப்பரவுதற்கு இடங்கொடுக்கிற, வழிவிடுகிற, இணங்குகிற, ஒத்துப்போகிற.
Peshito, Peshitta
மேலே அரமிய மொழியில் விவிலிய நுலின் பெயர்ப்பு.
Peshwa
n. (வர.) முற்கால மராட்டிய அரசின் முதலமைச்சர், மராட்டிய பரம்பரைக் குறுமன்னர்.
Peso
n. தென் அமெரிக்க குடியரசு நாடுகளில் வழங்கும் நான்கு ஷில்லிங்கு குத்தாய மதிப்புள்ள வௌளி நாணயம்.
Pessary
n. (மரு.) கருப்பையினை நிலைபிறழாமல் தாங்குதற்காக அல்குல் வாயிலிற் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருநிலைப்படுத்தும் குறிவாயுட் கரையும் மருந்து.
Pessimism
n. சோர்வுவாதம், உலகில் எதுவுமேகெட்டது என்று கொள்ளும் கோட்பாடு, சிணுங்கு மனப்பான்மை, எதிலுமே தீயய்ர்பு காணும் பாங்கு, தோல்வி மனப்பான்மை, கிளர்ச்சியின்மை, சோர்வு, அவாமுறிவு.
Pest
n. தொல்லை கொடுப்பவர், அழிவுவேலை செய்பவர், அழவுசெய்யும் உயிரினம், பீடை, தொற்றுநோய்.
Pester
v. தொந்தரவு செய், ஓயாது தொல்லை கொடு.
Pest-house
n. தொற்றுநோய் மருத்துவமனை.