English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Peter-penny, Peters-penny, Peters-pence
n. (வர.) போப்பாண்டவருக்கு விரும்பித் தரப்படும் பென்னி அளவு ஆண்டு வரித்தொகை.
Petersham
n. முறுக்குப்பட்டு, நாடா, முற்காலத்தில் அணியப்பட்ட கனமான மேலங்கி அல்லது காற்சட்டை, களத்த மேலங்கி அல்லது காற்சட்டை தைப்பதற்கான துணி.
Petiolar
a. இலைக்காம்பு சார்ந்த, இலைக்காம்பின் இயல்புடைய.
Petiolate, petiolated
a. இலைக்காம்புடைய.
Petiole
n. (தாவ.) இலைக்காம்பு.
Petit souper
n. நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து.
Petit verre
n. குவளை நிறை மது.
Petitio principii
n. நச்சுச் சுழல்வாதம், வாதக் குழப்பம், மெய்ப்பிக்க வேண்டியதையே ஆதாரமாகக் கொண்டுவிடுதல்.
Petition
n. வேண்டுகோள், மனு, விண்ணப்பம், குறையிரப்பு, முறைமன்றத்திடம் எழுத்து மூலமான மன்றாட்டு, (வினை.) வேண்டுகோள் விடு, விண்ணப்பஞ் செய்துகொள், மனுச்செய்.
Petitioner
n. மனுச்செய்பவர், திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி, (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர்.
Petitk-maitre
n. பகட்டன், பிலுக்கன், தற்பெருமைக்காரன்.
Petitmal
n. கடுமையற்ற, காக்காய்வலிப்பு நோய் வகை.
Petits soins
n.pl. சின்னஞ்சிறு துணையூழியங்கள்.
Petits-chevaux
n. சூதாட்ட விளையாட்டு வகை.
Petrel
n. கருமை வெண்மை நிறங்களும் நீண்ட இறகுகளும் உடைய சிறு கடற்பறவை வகை.
Petrifaction
n. கல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம்.
Petrify
v. கல்லாக்கு உணர்ச்சியறச்செய், வியப்பால் செயலறச்செய், அச்சத்தால் உணர்விழக்கச்செய், விறைத்துப்போகச் செய், கடினமாக்கு, மனம்-கொள்கை வகையில் உயிர்ப்பு ஆற்றல் இழக்கச்செய்.
Petroglyph
n. கற்பாறைச் செதுக்குவேலை.
Petrograph
n. கற்பாறைச் செதுக்கெழுத்து, கல்வெட்டு.
Petrography
n. கற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம்.