English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pew
n. கோயில் திண்ணை, திருக்கோயிலிற் குடுமபத்தின் ருக்கான சூழிருக்கை, திருக்கோயில் சூழிருக்கைத்தொகுதி, திருக்கோவிலிற் சாய்மானமுடைய நிலையான இருக்கை, (பே-வ.) இருக்கை, (வினை.) திருக்கோயிலிற் சூழிருக்கைகள் அமை, சூழிருக்கையாய் அடைப்பிடு.
Pew-rent
n. திருக்கோயிற் சூழிருக்கை வாடகை.
Pewter
n. வௌளீயமும், காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, வௌளீயக் காரீயக் கலவை கலத்தொகுதி.
Pfennig, pfenning
சிறு செர்மானிய செப்பு நாணயம், செர்மானிய வௌளி நாணயத்தில் நுறில் ஒரு பங்கு மதிப்புடைய காசு.
Pff-adder
n. பெரிய ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகை.
Phaeton
n. இரட்டைக் குதிரைத் திறப்பு வண்டி.
Phagedaena, phagedena
பரவும் குருதிக்கட்டிப்புண்.
Phagocyte
n. நோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு.
Phalangeal
a. (உள்.) கைவிரல்களின் அல்லது கால்விரல்களின் தனித்தனி எபு சார்ந்த.
Phalanger
n. பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம்.
Phalanstery
n. பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு, சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்.
Phalanx
n. (வர.) கிரேக்கரிடையே மாசிடோ னியரின் செறிவுமிக்க காலாட்படையணி, பொதுவழ்வு முறைக்குழு, பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம், (உள்.) கைகால் விரல்களின் தனி எபு, பூவிழைக்கொத்து.
Phalarope
n. நீரினுள் நடக்கவும் நீந்தவும் வல்ல சிறுபறவை வகை.
Phallus
n. இலிங்கவுரு, படைப்பாற்றல் சின்னமாக வழிபடப்படும் குறிவடிவம்.
Phanariot
n. கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர், துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
Phanerogam
n. (தாவ.) ஆண்பெண் கூறுகளையுடைய மலர்ச்செடிவகை.
Phansigar
n. கொள்ளைக் கூட்டத்தினர்.
Phantasm
n. கற்பனைக்காட்சி, உருவௌதத்தோற்றம், (உள.) புனைவுருத்தோற்றம், ஆவியுருக்காட்சி.
Phantasmagoria
n. லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி, பல் வண்ணப் புனைவுருக்காட்சி, பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி.
Phantasy
n. கற்பனையுருவினைப் படைக்கும் ஆற்றல், மனக்கண் தோற்றம்.