English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Phenomenalism, phenomenism
n. அறிவின் அடிப்படை நிகழச்சியுணர்வுகள் மட்டுமே என்ற கோட்பாடு.
Phenomenon
n. இயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள்.
Phenyl
n. கரியகக்காடியிலுள்ள அடிக்கூற்றுக் கரியகநெய்மம்.
Phew
int. வியப்புக்குறி, வெறுப்புக்குறி, பொறுதியின்மைக் குறிப்பொலி.
Phial
n. சிறுபுட்டி, சிறு கண்ணாடிக்குப்பி.
Philander
n. காதலன், பெண்பித்தன், காதற்பரத்தன், (வினை.) காதல்கொண்டு திரி, மகளிர் பின்னர் அலை.
Philanthropic
a. மனிதவினத்தை நேசிக்கும் பண்புள்ள, இரக்கமுள்ள, கொடைக்குணமுள்ள.
Philanthropist
n. மனிதவினப் பற்றாளர், பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, இரக்கமுள்ள நன்கொடையாளர்.
Philanthropize
v. இரக்கங் காட்டு, கொடையாளியாயிரு, பிறருக்கு உதவி செய்.
Philanthropy
n. மனிதளவின நேயம், அருட்பண்பு, கொடையாண்மை, சமுதாயத்தொண்டு.
Philatelist
n. அஞ்சல் தலைச் சேர்ப்பர்.
Philately
n. அஞ்சல் தலைத் திரட்டு, அஞ்சல் தலை ஆய்வு.
Philharmonic
n. இசையார்வமிக்கவர், (பெ.) இசைவிருப்புமிக்க.
Philhellene
n. கிரேக்கர்களிடம் நட்போடும் அன்போடும் பழகுபவர், கிரேக்க நாட்டு விடுதலை ஆதரவாளர், (பெ.) கிரேக்கரிடம் நட்பார்வம் மிக்க, கிரேக்க நாட்டு விடுதலைக்கு ஆதரவான.
PhilippI
n. கி,மு,43இல் நடைபெற்ற பெரும்போர்.
Philippics
n.pl. மாசிடோ னைச் சேர்ந்த பிலிப்பிற்கு எதிராக டெமாஸ்தனிஸ் என்ற பண்டைக் கிரேக்க சொற்பொழிவாளர் செய்த சொற்பொழிவுகள், அந்தோணிக்கு மாறாகச் சிசரோ செய்த ஆவேசச் சொற்பொழிவுப்ள், கடுமையான வசைமாரி, திட்டு.
Philippina, philippine
n. ஒருவகைத் தின்றிகொட்டை, கொட்டைப்பருப்பு பகிர்ந்தூண் விளையாட்டு மரபு.
Philistine
n. பிலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம், கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி, அமீனா, இலக்கியக் கருத்துரையாளர், வௌதயார், செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர், பணபற்றவர், உயர்நாட்டமற்றவர், உலகியல் நாட்டமுடையவர், (பெ.) பண்பற்ற, நாகரிகமற்ற, உயர்நாட்டமற்ற, உலகியற்பற்றுடைய.
Philobiblic
a. புத்தக விருப்புடைய, நுலார்வமுடைய.
Philogynist
n. பெண் விருப்பர்.