English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Philological
a. மொழிநுல் சார்ந்த, கலையிலக்கிய ஆர்வஞ்சார்ந்த.
Philologist
n. மொழிநுல் வல்லார், கலையிலக்கிய ஆர்வலர்.
Philology
n. மொழிநுல், கலை இலக்கியப் பற்றார்வம்.
Philomath
n. கல்வியார்வலர்.
Philomel, Philomela
(செய்.) இராக்குயில், இரவிற் பாடும் பறவை வகை.
Philoprogenitive
a. பிள்ளைக்கனி ஆர்வமுடைய.
Philosopher
n. மெயந்நுல் அறிஞர், தத்துவஞானி, மெய்யுணர்வுப் பற்றார்வலர், மெய்விளக்க இயல் ஆய்வாளர், அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர், மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர், உள்ள நடுநிலையாளர், எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர்,
Philosophic, philosophical
a. மெய்யுணர்வு இயல் சார்ந்த, தத்துவ ஞானத்துக்குரிய, மெய்யுணர்வியலிற் பற்றுடைய, தத்துவ அறிவுத்திறம் சான்ற, மெய்யுணர்வார்ந்த, இடரிடை உலையா அறிவமைதியுடைய, தன்னடக்க அமைதி வாய்ந்த.
Philosophism
n. மெய்யுணர்வுப் பாவனை, மெய்யுணர்வுவித்து, பிரஞ்சு அறிவுக்களஞ்சியத்தார் மெய்விளக்கமுறை.
Philosophize
v. மெய்யுணர்வு இயலாளராகச் செயலாற்று, தத்துவ ஆராய்ச்சி செய், கொள்கை ஆய்வு செய், தத்துவம் பேசு, கொள்கை ஆய்விலாழ்ந்துவிடு, நன்மை தீமை ஆழ்ந்தாராய், தத்துவப் போக்காக்கு, மெய்யுணர்வு இயலாளராக்கு, சமநிலைப்படுத்து, அறிவமைதிப்பண்பூட்டு.
Philosophy
n. அறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி.
Philotechnic
a. தொழிற்கலையார்வமுடைய, கலைநுணுக்க ஆர்வஞ் சார்ந்த.
Philter, philtre
வசிய மருந்து, காதலைத் தூண்டும் மருந்து.
Phiz
n. (பே-வ) முகம், முகத்தோற்றம்.
Phlebitis
n. குருதி நாளத்தின் புறத்தோல் வீக்கம்.
Phlebolite, phlebolith
n. குருதி நாளங்களில் ஏற்படும் கண்ணப்படிவுக் கோளாறு.
Phlebotomize
v. குருதி வடிக்கும் மருத்துவமுறையைக் கையாளு, குருதி வடிப்புச்செய்.
Phlebotomy
n. முற்காலக் குருதிவடிப்பு மருத்துவமுறை, மருத்துவமுறைக் குருதிவடிப்பு.
Phlegm
n. சளி, கோழை, கபம், குளிர்ச்சி, சோம்பேறித்தனம், உணர்ச்சியற்ற தன்மை.
Phlegmagogue
n. கபம் வௌதப்படுத்தும் மருந்து.