English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pinch
n. கிள்ளுதல், நெருடுதல், நுள்ளல், கடிப்பு, நெரிப்பு, வேதனை, சிட்டிகையளவு, நெருக்கடி வேளை, அவசர நொடிக்கட்டம், (வினை.) கிள்ளு, நுள்ளு, நெருடு, நசுக்கு, வருத்து, கடிப்புறுத்து, நோவுறுத்து, நோவால் நௌதயப்பண்ணு, கொல்முனைமுறி, தொல்லையளி, பணம் பிடுங்கு, சுரண்டு, கைக்கடிப்பாயிரு, பிசுணித்தனஞ் செய், கருமித்தனம் பண்ணு, கஞ்சத்தனங் காட்டு, தாற்றுக்கோலால் ஊக்கு, காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
Pinchbeck
n. போலித்தங்கம், செம்பு-துத்தநாகக் கலவைவகை, (பெ.) போலியான.
Pincushion
n. குண்டூசிச் செருகாணை.
Pindari
n. கொள்ளைக்கூட்டத்தினர்.
Pindaric
a. பிண்டார் என்ற பண்டைக் கிரேக்க கவிஞனுக்குரிய.
Pindarics
n.pl. பிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை, பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை.
Pine
-1 n. தேவதாரு, பசுமைமாறா ஊசியிலை மரவகை.
Pine
-2 v. மெலிவுறு, நலிவுறு, வாட்டமுறு, வதங்கு, ஏங்கு, வேணவாக்கொள்ளு, இனைவுறு, நினைந்து நினைந்து இரங்கு.
Pineal
a. (உள்.) தேவதாருவின் காயுருவுடைய.
Pineapple
n. அன்னாசிப்பழம்.
Pine-beauty
n. முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை.
Pine-cone
n. தேவதாருவின் திரளை.
Pinery
n. அன்னாசிப்பழத்தோட்டம், தேவதாரு மரச்சோலை.
Pin-feather
n. வளராத இறகு.
Pin-fire
a. துப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற.
Pinfold
n. அடைகொட்டில், (வினை.)பட்டியில் அடை.
Ping
n. விண்ணெற்ற ஒலி, துப்பாக்கிக் குண்டு பாயும் ஓசை, (வினை.) விண்ணென்ற ஓசையுடன் பாய், விண்ணென்ற ஓசையுடன் செல்லுவி.
Ping-pong
n. மேசை வரிப்பந்தாட்டம்.
Pinguid
a. எண்ணெய்ப்பசையுடைய, வழவழப்பான.
Pinguin
n. மேலை இந்திய தீவுகளிலுள்ள அன்னாசிபோன்ற பழவகை.