English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pin-head
n. குண்டூசித்தலை, மிகச்சிறிய பொருள்.
Pin-hole
n. குண்டூசித்துளை, முளைபொருந்துகிற, துளை.
Pinion
n. சிறுகுநுனி, (செய்.) சிறகு, பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி, விசைகொள் இறகு, செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி, (வினை.) சிறகொடி, பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய், இயங்க முடியாமற் கட்டு, கைகளைக் கட்டு, அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு.
Pink
-1 n. பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், உச்ச உயர் நிறைவு, உச்ச நிறை நலம், நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை, நரிவேட்டையாளர், நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில், (பெ.) இளஞ்சிவப்பான, அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
Pink
-2 n. மஞ்சள் சாயப்பொருள்.
Pink
-4 n. (வர.) ஒடுங்கிய பின்பகுதியை உடைய பாய்க்கப்பல்வகை.
Pink
-5 v. வாளால் ஊடுருவு, தோலில் துளைவரிசையிட்டொப்பனைசெய், அணிசெய், அழகுபடுத்து.
Pink
-6 v. குமுறல் வெடியோசை செய், கலவையின் அரைகுறை எரிவியக்கத்தால் பலபட இரைந்தெழும் வெடிமுழக்கஞ்செய்.
Pink-eye
n. குதிரைகளுக்கு வரும் ஒட்டுவாரெட்டிக் காய்ச்சல், ஒட்டுவாரொட்டியான கண்ணோய்வகை, கடல்மீன்களின் செந்நிறக் கோளாறு.
Pink-eyed
a. இளஞ்சிவப்புநிறக் கண்களையுடைய.
Pinkish
a. சிறிதே இளஞ்சிவப்பான.
Pinkster
n. இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை.
Pinky
a. இளஞ்சிவப்பவாவிய, இளஞ்சிவப்புச் சாய்வான.
Pin-money
n. கையடைப்பணம், உடுப்புச்செலவு முதலியவற்றிற்காகப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஆண்டுப்படிப்பணம், மனைவியின் சொந்தச் செலவுக்கென்று ஒதுக்கப்பட்ட படிப்பணம்.
Pinna
n. புறச்செவியின் அகல் மேற்புறம், இறகு வடிவ இலையின் உள்ளுறுப்புக் கிளையிலை, துடுப்பு, துடுப்பமைவு.
Pinnacle
n. கோபுரமுகடு, மோட்டு முகடு, இயற்கைக் குவடு, உச்சநிலை, முழுநிறைநிலை, (வினை.) முகடாய் அமை, முகட்டில் வை, முகட்டுடன் அமை.
Pinnate, pinnated
(தாவ.) இலைகள் வகையில் இறகுவடிவான. (வில.) இறகுபோன்ற வடிவமைதியுடைய.
Pinner
n. குத்திவைத்துப் பிணைப்பவர், குத்திவைத்துப் பிணைப்பது, குண்டூசி செய்பவர்.