English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pipkin
n. மண்கலத் தட்டு, மட்பாணடம்.
Piquant
a. காரசாரமான, கூர்ஞ்சுவை தூண்டுகிற, சுவையார்வம் கிளறிவிடுகிற.
Pique
-1 n. வன்மம், அகக்காழ்ப்பு, வெம்பகை, கடுஞ்சீற்றம், (வினை.) உள்ளரிப்பூட்டு, நெஞ்சராவு, தற்பொருமைக்கு ஊறுசெய், தற்பெருமைகொள்ளுவி, விருப்பு மேற்கொள்ளுவி.
Pique
-2 n. இருவர் சீட்டாட்ட வகையில் எதிரி ஆடத்தொடங்குமுன் 30 கெலிப்புப்புள்ளி எடுத்தல், (வினை.) எதிரி ஆடத்தொடங்குமுன் 30 கெலிப்புப்புள்ளி எடு.
Pique
-3 n. விறைப்பான ஊடுநுலுடைய பருத்தித்துகில்.
Piquest
-2 n. (படை.) காவற் படைப்பிரிவு.
Piquet
-1 n. 32 சீட்டுடன் இருவராடும் சீட்டாட்ட வகை.
Piracy
n. கடற்கொள்ளை, கொள்ளைக்குற்றம், உரிமைமீறிய வௌதயீட்டுச் செயல்.
Piragua
n. கட்டுமர வகை, ஒரே கட்டையில் செய்யப்பட்ட ஒடுங்கிய நிள்படகு, இருபாய்மரமுடைய தோணி.
Pirate
n. கடற்கொள்ளைக்காரர், கொள்ளைக்கப்பல், கடற்கொள்ளைக்காரர் கப்பல், ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர், பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி, மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி, பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி, (வினை.) சூறையாடு, இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை, கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று.
Piratic, piratical
கடற் கொள்ளைக்காரருக்குரிய, கடற்கொள்ளை சார்ந்த, கொள்ளையடிக்குந் தன்மையான, உரிமைப்பறிப்புச் சார்ந்த.
Pirmacy
n. திருக்கோயில் தலைமைக்குருவின் அலுவலகம், முதன்மை, தலைமைச்சிறப்பு.
Pirouette
n. குழு நடத்திடையே காற்பெருவிரன்றிய சுற்றாட்டம், (வினை.) நடனத்திடையே காற்பெருவிரலுன்றிச் சுற்றாட்டமாடு.
Pis aller
n. சிறந்த வழி வேறு இல்லையென்று மேற்கொள்ளப்பட்ட நெறி.
Piscary
n. மீன் பிடிக்கும் உரிமை, அயலார் நீர்ப்பரப்பில் உடையவருடைய பிறருடனே சென்று மீன்பிடிக்கும் உரிமை.
Piscatorial
a. மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
Piscatory
a. மீனவரைச் சார்ந்த, மீன்பிடிப்பதற்கு உரிய.
Pisces
n.pl. மீன்கள், மீனராசி, மீன வான்மீன் வட்டக்குழு.