English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plantocracy
n. பண்ணையார் ஆட்சி.
Planxty
n. மூவகைச் சந்தப்போக்குடைய அயர்லாந்து இசைப்பாங்கு.
Plaque
n. அணிகிளர் பலகை, பெயர்ப்பொறி கல், பதக்கவில்லை, (மரு.) வீக்கத் தழும்பு.
Plash
-1 n. சதுப்புநிலக் குளம், குட்டை
Plash
-2 n. முக்குளிப்பு, தடாற்குதிப்பு, (வினை.) நீரில் துடுமெனப்பாய்.
Plash
-3 n. வேலியாகத் தழைகிளைகளை வளைத்து வரிந்து கட்டு, தழைகிளை வரிந்து வேலி அமை, தழைகிளை வரிந்து வேலி செப்பஞ்செய்.
Plashy
a. நீர்நிலை சார்ந்த, சதுப்பு நிறைந்த.
Plasm
n. உயிர்மத்தின் ஊன்மம், உயிரியற்பொருள்.
Plasma
n. பசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
Plasmatic, plasmic
ஊபூர் சார்ந்த, ஊன்மஞ் சார்ந்த.
Plasmodium
n. கருவுள் இணையாத அணு உயிர்களின் திரள்பிழம்பு, முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்.
Plasmolyse
v. ஊன்ம உலர்வுக்கு ஆட்படுத்து, தாவர உயிர்மச்சுரிப்பு ஊட்டு.
Plasmolysis
n. ஊன்ம உலர்வு, நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம், தாவர உயிர்மச்சுரிப்பு, விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.
Plaster
n. கட்டு, அரைசாந்து, சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை, சுண்ணக்கந்தகி, (பெ.) அரைசாந்தாலான, (வினை.) மருத்துவக்கட்டிடு, கட்டிட்டு மருத்துவஞ்செய், பிசைந்து பூசு, அப்பு, பூசு, கொட்டிப் பரப்பு, வாரி அப்பு, மட்டின்றப்பூசு, மேல்ஒட்டு, அரை, பொடியாக்கு, வேட்டுக்களால் தகர், மென்பரப்பாக்கு, மெழுகிப்பசப்பு, களிக்கல் பொடியூட்டு, நீறுகொண்டு ஒட்டியிணை.
Plastic
n. குழைம ஒட்டுறுப்பறவை, வார்ப்புப்பொருள், (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க, குழைத்துருவாக்கப்பட்ட, குழை மக்கலை சார்ந்த, குழைவான, எளிதில் உருவேற்கிற, எளிதில் மாறுகிற, நிலையுருவற்ற, உருமாற்றத்தக்க, உருத்திரிபூட்டத்தக்க, இறாது தளர்ந்து வளைகிற, இயல்வளர்ச்சியூட்டுகிற, உயிரியல் இழைமமாக்கத்தக்க,பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க, உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய.
Plastic industry
நெகிழித் தொழிலகம்
Plasticine
n. செயற்கைக் களிமண், குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள்.
Plasticity
n. குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை.
Plasticizer
n. குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள்.
Plastics
n. pl. குழைபொருட் குழுமம், குழைவுப்பொருள் தொகுதி, வார்ப்படப் பொருள்கள்.