English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Root-pressure
n. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
Root-stock
n. (தாவ) தண்டங்கிழங்கு, கிளைவேர்கள் தோன்றும் வேர்த்தண்டு.
Rooty
a. வேர்கள் நிறைந்த, வேர்கள் கொண்ட, வேர்கள் போன்ற, வேரின் இயல்பினையுடைய.
Rope
n. கயிறு, சணலின் புரி முறுக்கு, கம்பிவல்ம், தோல்வார் முறுக்கு, முத்துவடம், வெங்காயக் கோவை, மீன்சினையின் தொடர் வரிசை, வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள், கயிறுபோன்ற பசைப் பொருள், (வினை) கயிற்றால் கட்டு, விரிந்து கட்டு, கயிறு கொண்டு இறுக்கிப்பிணை, மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை, ஆளைச் சேர்த்துக்கட்டு, வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து, இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை, பந்தயத்தில் குதிரையைத் தடைசெய், கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய், ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய், கயிறு போன்றாகு, பிசுபிசுப்பாகு.
Rope- ladder
n. கயிற்றேணி.
Rope-dancer
n. கழைத்கூத்தாடி.
Rope-dancing
n. கழைத்கூத்தாட்டம்.
Rope-drilling
n. கயிற்றால் இயங்கும் துறப்பணத்தால் துளையிடல்.
Rope-maker
n. கயிறு முறுக்குபவர்.
Ropemaking
n. கயிறு முறுக்கு தொழில்.
Ropemanship
n. கழைக்கூத்தாண்மை, கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.
Rope-moulding
n. கயிறு முறுக்குபோலச் சுருள் வடிவச் செதுக்கு.
Rope-quoit
n. கப்பல்தள எறிவாட்டத்திற்குரிய கயிறு வளை வட்டு.
Roper
n. கயிறு திரிப்பவர், பந்தயத்தில் கெலிக்காதபடிக் குதிரை கடிவாளக் கயிற்றை இழுத்துத் தடைசெய்பவர், பார்வை விலக்கு.
Rope-ripe
a. தூக்கியல் இடத்தக்க.
Ropery
n. கயிறு திரிக்குந்தொழில், வஞ்சகம், சூழ்ச்சி, கபடச்செயல்.
Rope-soled
a. கயிற்று அடிப்பகுதி வாய்ந்த.
Rope-trick
n. கயிற்றுமாயம், கயிற்றுதவியால் திடுமென மறையும் மாயமுறை.
Rope-walk
n. கயிற்றை முறுக்கும்போது பயன்படும் நீண்டுகுறுகியநிலம்.