English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rosewood
n. கருங்காலி வகை.
Rosicrucian
n. கிறிஸ்தியன் ரோசன்க்ரூஸ் எபவரால்(14க்ஷ்4-இல்) தோற்றுவிக்கப்பெற்ற மாயமறைத்துறைக் கழக உறுப்பினர், (பெயரடை) மாயமறைத்துறைக் கழகஞ் சார்ந்த.
Rosin
n. மண்டித் தைலம், கர்ப்பூரத் தைல வண்டல், (வினை) யாழ் வில் நரம்புபோன்ற வற்றிற்கு மண்டித்தைலத்தாற் பூச்சிடு, மண்டித் தைலந் தடவு, மண்டித்தைலம் மேலிடு.
Rosinante
n. வற்றி மெலிந்த குதிரை.
Rosolio
n. ஊட்ட இன்மருந்து வகை.
Roster
n. வேலைமுறையேடு, பெயர்ப்பட்டியல்.
Rostral
a. தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட, (உயி) அலகுபோன்ற உறுப்புச் சார்ந்த, அலகுபோன்ற உறுப்பிலுள்ள.
Rostrate
a. (உயி) முகப்பு அலகினையுடைய.
Rostrated
a. (உயி) முகப்பு அலகினையுடைய, (உயி) அலகுறுப்பில் முடிகிற, தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட.
Rostrum
-1 n. (வர) பண்டை ரோமரின் போர்க்கப்பல். முகப்பு அலகு.
Rostrum(2)l n.
(உயி) அலகுபோன்ற உறுப்பு.
Rosulate
a. (தாவ) இலைவகையில் ரோசா இதழ்கள் போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெற்ற.
Rosy
a. சிவப்பு ரோசாவின் நிறமுடைய, உடல்நலமுடைய, மலர்கிற, செந்நிறம் படர்ந்த, ரோசாமலர் போன்ற, ரோசாப்பூவாலான, ரோசாப்பூ நிரம்பிய, ரோசா மலர்கள் உதிரப்பெற்ற.
Rot
n. அழுகல், ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய், மடமை, மோசமான பேச்சு, தவறான வாதமட், கோளாறான யோகசனை, பேதமைப்பாதை, விரும்பத்தகாத நிலை, மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர், போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர், போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர், (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு, கேடுறு, இழிவுறு, வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு, பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு, அழிவுறச் செய், மோசமுறச் செய், வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு, நையாண்டியாக உரையாடு.
Rota
-1 n. வேலைமுறைப்பட்டியல், வேலைமுறை.
Rota
-2 n. ரோமன் கத்தோலிக்கர் மீயுயர் நீதிமன்றம்.
Rotarian
n. சுழல்கழக உறுப்பினர், (பெயரடை) சுழல்கழகஞ்சார்ந்த.
Rotary
-1 n. சுழல்கழகம், சுழல்கழகப் பண்பு, (பெயரடை) சுழல் கழகத்தை ஒத்த இலக்கமைப்புடைய, சுழல்கழகஞ் சார்ந்த.